நீலகிரியில் ரூ.2 கோடி மதிப்பில் 5 புதிய அரசுப் பேருந்துகள்: கொறடா கா.ராமச்சந்திரன் கொடியசைத்து தொடக்கி வைத்தார்
Aug 12 2025
14

ஊட்டி, ஆக. 10–
நீலகிரி மாவட்டம், உதகை மத்திய பேருந்து நிலையத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், அரசு தலைமைக் கொறடா கா.ராமச்சந்திரன், ரூ.2 கோடி மதிப்பில் 5 புதிய அரசுப் பேருந்துகளின் சேவையை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
புதிய பேருந்துகளைத் தொடங்கி வைத்துப் பேசிய அரசு தலைமைக் கொறடா கூறியதாவது:-
“பழைய பேருந்துகளுக்கு மாற்றாக, புதிய பேருந்துகளை அறிமுகப்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில், நீலகிரி மாவட்டத்தில் தொலைதூர வழித்தடங்களான மைசூர் மற்றும் பாலக்காடு போன்ற வழித்தடங்களில் இயக்கப்படவுள்ள இந்தப் புதிய பேருந்துகள், பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?