நகை திருட்டு, தீண்டாமை வழக்குகளில் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை இடைநீக்கம் செய்ய கோர்ட் உத்தரவு

நகை திருட்டு, தீண்டாமை வழக்குகளில் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை இடைநீக்கம் செய்ய கோர்ட் உத்தரவு

சென்னை:

நகை திருட்​டு, தீண்​டாமை வன்​கொடுமை மற்​றும் ரியல் எஸ்​டேட் வழக்​கு​களில் உரிய விசா​ரணை நடத்தி நடவடிக்கை எடுக்​காத போலீஸ் அதி​காரி​களை இடைநீக்​கம் செய்​ய​வும், துறை ரீதி​யாக நடவடிக்கை எடுக்​க​வும் தமிழக டிஜிபிக்கு உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.


சென்னை சூளைமேடு பகு​தி​யைச் சேர்ந்த ஜரினா பேகம் உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​திருந்த மனு​வில், “92 பவுன் நகை காணாமல் போனது தொடர்பாக கடந்த 2018 செப்.4-ல் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்​பாக சூளைமேடு போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்​தும் கடந்த 7 ஆண்​டு​களாக நகைகளை மீட்க எந்த நடவடிக்​கை​யும் எடுக்​க​வில்​லை.


சிபிசிஐடி போலீ​ஸாரின் விசா​ரணைக்கு மாற்றி உத்​தர​விட வேண்​டும்” எனக் கோரி​யிருந்​தார். இந்த வழக்கு நீதிபதி பி.வேல்​முரு​கன் முன்​பாக விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது கடந்த 2018 முதல் தற்​போது வரை சூளைமேடு காவல் நிலை​யத்​தில் ஆய்​வாளர்​களாக பணி​யாற்​றிய அனை​வரும் உயர் நீதி​மன்​றத்​தில் ஆஜராகினர்.


அதையடுத்து நீதிப​தி, “இது​போன்ற குற்ற வழக்​கு​களில் எப்​படி விரை​வாக துப்பு துலக்​கு​வது என்​பது குறித்த பயிற்​சியை தமிழக அரசு காவல் துறை​யினருக்கு வழங்க வேண்​டும். இந்த வழக்​கில் கடமையை செய்​யத் தவறிய அதி​காரி​கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்​தரவு பிறப்​பிக்க நேரிடும்” என எச்​சரித்​தார்.


பின்​னர் சூளைமேடு காவல் நிலை​யத்​தில் நீண்​ட​காலம் ஆய்​வாள​ராக பணி​யாற்றி தற்​போது ரயில்வே போலீஸ் உதவி ஆணை​ய​ராக உள்ள கர்​ணன் என்​பவரை பணி​யிடை நீக்​கம் செய்​ய​வும், கடந்த 2018 முதல் தற்​போது வரை சூளைமேட்​டில் பணி​யாற்றி வரும் காவல் ஆய்​வாளர்​கள் மீது துறை ரீதி​யாக நடவடிக்கை எடுக்​க​வும் டிஜிபிக்கு உத்​தர​விட்​டுள்​ளார்.


இதே​போல கடந்த 2018-ம் ஆண்டு சேலம் மாவட்​டம் வீராணம் காவல் நிலை​யத்​துக்கு உட்​பட்ட பகு​தி​யில் தவணை முறை​யில் வீட்​டுமனை வழங்​கு​வ​தாகக் கூறி மோசடி​யில் ஈடு​பட்​ட​வர்​கள் மீது நடவடிக்கை எடுக்​காத வழக்​கில் சம்​பந்​தப்​பட்ட வீராணம் காவல் ஆய்​வாளர்​களும் ஆஜராகி​யிருந்​தனர். அவர்​கள் மீதும் துறை ரீதி​யாக நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு நீதிபதி பி.வேல்​முரு​கன் உத்​தர​விட்​டுள்​ளார்.



இதே​போல விழுப்​புரம் மாவட்​டம் வானூர் பகு​தி​யில் நிலம் தொடர்​பாக பட்​டியலின சமூகத்​தைச் சேர்ந்த செந்​தாமரை என்​பவருக்​கும், மாற்று சமூகத்​தைச் சேர்ந்த வீரா​சாமி என்​பவருக்​கும் இடையி​லான பிரச்​சினை​யில், தீண்​டாமை வன்​கொடுமை வழக்​குப் பதி​யாமல் ஒருதலைபட்​ச​மாக செயல்​பட்ட கோட்​டக்​குப்​பம் டிஎஸ்​பியாக பணிபுரிந்த, தற்​போது தேனி மாவட்​டம் போடி டிஎஸ்​பி​யாக உள்ள சுனிலை இடைநீக்​கம் செய்​ய​வும்​ டிஜிபிக்​கு நீதிப​தி உத்​தர​விட்​டார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%