தலைமை செயலகத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.17.50 லட்சம் மோசடி: தலைமறைவாக இருந்தவர் கைது
Jul 17 2025
78

சென்னை:
பாரிமுனை பகுதியில் வசிப்பர் ஜெய்சங்கர் (49). இவருக்கு ஓட்டேரியைச் சேர்ந்த முத்துராமன் என்பவரது அறிமுகம் கிடைத்தது. அப்போது, முத்துராமன் தன்னால் தலைமைச் செயலகத்தில் அரசு வேலை வாங்கித் தர முடியும் என்று கூறியுள்ளார்.
இதை நம்பிய ஜெய்சங்கர் தனது உறவினர்கள் இருவருக்கு தலைமைச் செயலகத்தில் கம்யூட்டர் ஆபரேட்டர் வேலை வேண்டி, கடந்தாண்டு ஜனவரியில் ரூ.17.50 லட்சம் கொடுத்துள்ளார். முத்துராமன் அதே ஆண்டு பிப்ரவரியில் அரசு வேலைக்கான பணி நியமன உத்தரவை ஜெய்சங்கரிடம் கொடுத்துள்ளார்.
அந்த உத்தரவு போலியானது என தெரியவந்ததால் ஜெய்சங்கர் இதுகுறித்து முத்தியால்பேட்டை போலீஸில் புகார் தெரிவித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து முத்துராமனை கைது செய்து சிறையில் அடைத்தனர். மோசடிக்கு உடந்தையாக இருந்த கொளத்தூரைச் சேர்ந்த மகேஷ் (36) தலைமறைவாக இருந்தார்.
அவரை தனிப்படை அமைத்து போலீஸார் தொடர்ந்து தேடி வந்தனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த மகேஷ் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து போலி பணிநியமன ஆணைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?