மதுரை, அக். 31- தமிழகத்தில் 2026 மார்ச்சுக்குள் 28 இடங்களில் ஆதார் சேவை மையம் திறக்கப்படும் என்று நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் கார்டில் உள்ள தவறுகளை திருத்த முடியாமல் அவதிப்பட்டு வந்த பரமக்குடியைச் சேர்ந்த 74 வயதான புஷ்பம் தாக்கல் செய்த மனுவை வெள்ளியன்று விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் விசாரித்தார். மனுதாரர் ,தனது கணவர் 21 ஆண்டுகள் இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்றும், அவர் 23.5.2025 அன்று மரணமடைந்ததாகவும், இதையடுத்து குடும்ப ஓய்வூதியம் பெற விண்ணப்பித்தபோது ஆதார் கார்டில் பெயர் மற்றும் பிறந்த தேதியில் பிழை இருப்பதாக கூறி விண்ணப்பம் நிரா கரிக்கப்பட்டதாகவும் மனுவில் கூறியிருந்தார். பரமக்குடி இ-சேவை மையம், தபால் நிலையம் மற்றும் பெங்களூரில் உள்ள ஆதார் மண்டல அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் பலமுறை முயன்றும் பிழை திருத்தம் செய்ய முடியாததால் நீதிமன்றத்தை அணுகியிருந்தார். விசாரணையின் போது, ஆதார் தகவல் திருத்தம் தற்போது மதுரையில் உள்ள ஆதார் சேவை மையத்தில் மட்டுமே செய்ய முடியும் என அரசு தரப்பு தெரிவித்தது. இதற்கு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் கூறு கையில், மனுதாரர் மூத்த குடிமகள்; பரமக்குடியில் வசிக்கிறார். பெயர், பிறந்த தேதி போன்ற மாற்றங்களுக்கு மதுரைக்கு அலைய வேண்டிய அவசியம் இல்லை. ஆதார் திருத்த வசதி மாவட்ட அளவிலேயே இருக்க வேண்டும். தமிழகத்தில் தற்போது 4,056 ஆதார் சேர்க்கை மையங்கள் உள்ளன. இவை ஆதார் தகவல் மாற்ற வசதி யுடனும் செயல்பட வேண்டும். மாநிலம் முழுவ தும் 2026 மார்ச் மாதத்துக்குள் 28 இடங்க ளில் புதிய ஆதார் சேவை மையங்கள் திறக்கப்படும் என ஆதார் அமைப்பு தெரி வித்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு மையம் அமைய வேண்டும் என்று தெரிவித்தார். அதேபோல், மனுதாரர் கோரும் தகவல் திருத்தத்தை மதுரை ஆதார் சேவை மைய அதிகாரிகள் மேற்கொண்டு, அதனைத் தொடர்ந்து குடும்ப ஓய்வூதிய ஆவணங்களில் தேவையான மாற்றங்களைச் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?