இன்று முதல் வங்கிக் கணக்குகளில் நாமினி விவரம் கட்டாயம்

இன்று முதல் வங்கிக் கணக்குகளில் நாமினி விவரம் கட்டாயம்



சென்னை, அக்.31 - புதிதாக வங்கிக் கணக்கு தொடங்கு பவர்களிடம் இருந்து வங்கிகள் கட்டாயம் நாமினி பெயரையும் பெற வேண்டும் என்கிற விதிமுறையைக் கொண்டு வந்துள்ளது இந்திய ரிசர்வ் வங்கி. இந்த உத்தரவு நவம்பர் 1 முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது. வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் திடீரென்று இறந்துவிட்டால், அந்தக் கணக்கில் இருக்கும் பணத்தை யாரிடம் வழங்குவது என்பதில் எழும் குழப்பங்களை யும் சிக்கல்களையும் சரிசெய்யவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு டெபாசிட் கணக்குகள் மற்றும் லாக்கர்களுக்கும் பொருந்தும். வாடிக்கையாளர் நாமினியை நியமிக்க விருப்பம் காட்டவில்லை என்றால், அந்த நபரிடம் இருந்து வங்கிகள் எழுத்துப்பூர்வ கடிதத்தைப் பெற்று கொள்ள வேண்டும். அதையும் வழங்க மறுத்தால், அதை வங்கிக் கணக்கு திறக்கும் ஆவணங்களில் குறிப்பிட்டுக் கொள்ளலாம். இந்தப் புதிய உத்தரவின்படி, வாடிக்கையாளர்கள் நான்கு நாமினிகள் வரை நியமித்துக் கொள்ளலாம். முதலாமவர் இறந்துபோகும் பட்சத்தில், அடுத்தவருக்கு வழங்கப்படும் என்ற வரிசை முறை பின்பற்றப்படும். ஏற்கனவே வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் கேஒய்சி அப்டேட்டின் போது நாமினிகளை நியமித்துக் கொள்வது நல்லது என வங்கி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%