நாவடக்கம்

நாவடக்கம்


அறுசீர் மண்டிலம்.


ஆவலினால்

   அதிகமாகப்

     பேசாதே

அன்பான

   பேச்சுக்கே

      மதிப்புண்டு!

மேவுகின்ற

   வகையினிலே

     பேசினாலே

மேன்மையென்றே

   போற்றிடுவர்

     எல்லோரும்!

பூவினைப்போல்

    மென்மையாகப்

      பேசிடுவாய்

புத்தெழுச்சி

   கொண்டேதான்

      பேசிடுவாய்!

*நாவடக்கம்*

    எந்நாளும்

      நல்லதன்றோ

நாளும்தான்

   சிந்தித்துப்

      பேசலாமே!



நாவாலே

   கெட்டவர்கள்

     பலருண்டு

நன்மையின்றித்

  தின்மையினைப்

     பெற்றாரே!

ஏவுமாறு

   எப்போதும்

      பேசாதே

எழிலாக

   எஞ்ஞான்றும்

     பேசிடுவாய்!

கூவுகின்ற

  முறையினிலே

     பேசாதே

கொஞ்சுகின்ற

   தமிழ்போலப்

     பேசிடுவாய்!

*நாவடக்கம்*

     எந்நாளும்

       நன்றன்றோ

நாளும்தான்

   சிந்தித்துப்

     பேசலாமே!


*முனைவர்*

*இராம.வேதநாயகம்*

திருவண்ணாமலை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%