சொத்து

சொத்து

 


குருவிக்கும் கூடு உண்டு என்பார்கள் -ஆனால் 

எனக்கு தெரிந்து 

அப்பா வீடு ஏதும் கட்டியது இல்லை 

எல்லாம் இருந்தும் 

குறை சொல்லும் 

சில மனைவிமார்களை போல் 

அம்மா இல்லை. 

அப்பா இறந்த தினம் 

வட்டிக்கு கடன் கொடுத்தவர்கள் 

வரிசை கட்டி நின்றனர் 

குடும்ப மானம் காக்க அம்மாவின் நகை 

மார்வாடி லாக்கர் ஏறியது .

ஓடுகிறேன் ,ஓடுகிறேன் 

ஜெயிக்க வேண்டுமென 

இரவு ,பகல் பாராமல் 

உழைத்துக் கொண்டிருக்கிறேன் 

அப்பாவை போல் !

இதுவரை 

நினைவு தெரிந்து

சொத்தேதும் சேர்க்கவில்லை 

அப்பா கொடுத்த 

சக்கரை நோயை தவிர !


நௌஷாத் கான். லி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%