இமயம் போல்...

இமயம் போல்...


இல்லறமே நல்லறமென்றே இணையுதே இருமனம் இனிதே இன்று நல்லவை யாவும் பெற்றுவாழ வாழ்த்தும் பல இதயங்கள் இங்கு; இமயம் போல் நிமிர்ந்து நின்றே இல்லற வாழ்வை நடத்திடுங்கள் இன்னல்கள் ஏதும் வந்தபோதும் இணைந்தே இருவரும் செயல்படுங்கள் பிறந்த வீட்டின் பெருமைகளைப் புகுந்த வீட்டிலும் காத்திடுங்கள்; நம்மை நாடிவந்த பெண்ணை நலமுடன் வாழச் செய்திடுங்கள்; புன்னகை முகத்தில் பூத்திடவே மண்ணுலகில் நீங்கள் வாழ்ந்திடுங்கள்; பொன்னகை இல்லாக் காரணத்தால் புன்னகைக்க மட்டும் மறந்திடாதீர்கள்; எதுவந்தாலும் ஏற்றுக் கொண்டே எளிமையாய் வாழப் பயின்றிடுங்கள்!



எஸ். சந்திரசேகரன் அமுதா செஞ்சிக்கோட்டை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%