சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி: அனைத்துக்கட்சியினருடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை

சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி: அனைத்துக்கட்சியினருடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை

சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி: அனைத்துக்கட்சியினருடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை

தி.மு.க. கூட்டணி எதிர்ப்பு; அ.தி.மு.க. கூட்டணி ஆதரவு


சென்னை, அக்.30-–


சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி தொடர்பாக அனைத்து கட்சி நிர்வாகிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் நேற்று தலைமைச்செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.


அப்போது தி.மு.க உள்ளிட்ட 9 கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. அண்ணா தி.மு.க., பா.ஜ.க., தே.மு.தி.க. ஆகிய 3 கட்சிகள் மட்டுமே வரவேற்பு தெரிவித்துள்ளனர்.


இந்த ஆலோசனை கூட்டத்தில் தேசிய மற்றும் மாநில கட்சிகள் என மொத்தம் 12 கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


கூட்டத்தில் தி.மு.க. சார்பில் ஆர்.எஸ்.பாரதி, என்.ஆர்.இளங்கோ, அ.தி.மு.க. சார்பாக இன்பதுரை எம்.பி., ஜெயக்குமார், பா.ஜனதா சார்பில் கரு.நாகராஜன், கராத்தே தியாகராஜன், காங்கிரஸ் தரப்பில் தங்கபாலு, செல்வம், மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் சாமுவேல், ஆறுமுக நயினார், கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வகிதா நிசாம், பெரியசாமி, நாம் தமிழர் கட்சி சார்பில் கிருஷ்ணன், செந்தில் குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் எஸ்.எஸ்.பாலாஜி எம்.எல்.ஏ., குணவழகன், தே.மு.தி.க. சார்பில் பார்த்தசாரதி, ஜனார்த்தனன், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ஆனந்தன், ஆம் ஆத்மி - ஸ்டெல்லா மேரி, முகமது பாரூக், தேசிய மக்கள் கட்சி - கார்த்திக், சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


எதிர்ப்பு-, வரவேற்பு


இந்த கூட்டத்தில் தமிழகத்தில் செய்யப்பட உள்ள சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த பணி குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம் அளித்தார். தேர்தல் ஆணையத்தின் இந்த பணிக்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டார். பின்னர் ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.


அதில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் மற்றும் ஆம் ஆத்மி, நாம் தமிழர் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் தேசிய மக்கள் கட்சி ஆகிய 9 கட்சிகள் தமிழகத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த பணி மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால் அண்ணா தி.மு.க., பா.ஜ.க., தே.மு.தி.க. ஆகிய 3 கட்சிகள் வரவேற்பு தெரிவித்தனர். இந்த கூட்டத்திற்கு பின், அரசியல் பிரநிதிகள் பேட்டி கொடுத்தனர்.


அப்போது தி.மு.க. செய்தி தொடர்பாளர் ஆர்.எஸ்.பாரதி கூறுகையில், ‘சிறப்பு தீவிர பணிக்கு தி.மு.க. எதிரானது அல்ல. கடந்த காலங்களிலேயே முறையான வாக்காளர் பட்டியல் தயாரிக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறோம். ஆனால் இப்போது திட்டமிட்டு உள்நோக்கத்தோடு தமிழகம், கேரளா, புதுசேரியில் தேர்தல் நடைபெற உள்ள சூழ்நிலையில் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. அனைத்து கட்சி கூட்டத்திற்கு உண்மையில் தேர்தல் ஆணையம் மதிப்பு கொடுத்தால் இந்த சிறப்பு தீவிர திருத்தப்பணியை தள்ளிவைக்க வேண்டும்’ என்று கூறினார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%