சித்தனா - பித்தனா

சித்தனா - பித்தனா


அறுசுவை உண்டி குறுக்கி

ஐவர் மயக்கமுற

ஐவரோடு உறவு அறுத்து

நால்வரை வாகை சூட

மும்மலங்கள் நீங்குமே!


முத்திரிகளை ஒன்றாய் திரிக்க;

ஓங்கும் ஒண்சுடரை

ஆக்ஞாவில் ஏற்ற

நாதசம்மியத்தின் ஜதியுடன்

இரு நடன காட்சி காணும் கணத்தில்:


ஆயிரமிதழோடு தாமரை மலர;

அமிர்த தாரை 

தானே பொங்கி வழிய 

போவதும் வருவதுமின்றி

ஓரிடமென இறையில் புகுந்திருப்பன்;


அவனைச் 

சித்தனென்றும் இயம்பலாம்!

பித்தனென்றும் 

பகரலாம்!

கேட்பதற்கு அவன் இல்லை; இங்கே!


சசிகலா விஸ்வநாதன்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%