கெட் ஃபிட் சென்னை’ நடைப்பயணம்; சைக்கிள் பயணம்: பங்கேற்றவர்களுக்கு மா.சுப்பிரமணியன் பதக்கம், பரிசு வழங்கினார்

கெட் ஃபிட் சென்னை’ நடைப்பயணம்; சைக்கிள் பயணம்: பங்கேற்றவர்களுக்கு மா.சுப்பிரமணியன் பதக்கம், பரிசு வழங்கினார்


சென்னை மாநகராட்சியின் சார்பில், தமிழ்நாடு சைக்கிளிங் அசோசியேசன் இணைந்து சென்னை மாநகர மக்களின் உடல் நலம் மற்றும் மனநலத்தை பேணுகின்ற நலவாழ்வு முயற்சியாக கடந்த 1–ந் தேதி அன்று காலை வேளச்சேரி–தரமணி எம்.ஆர்.டி.எஸ் சாலையில் ‘கெட் பிட் சென்னை’ எனும் நடைபயணம் மற்றும் சைக்கிள் பயணம் நிகழ்வினை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தொடங்கி வைத்தார். பங்கேற்றவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கிப் பாராட்டினார். துணை ஆணையாளர் எச். ஆர். கெளஷிக் பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினார்.


அதனைத் தொடர்ந்து, நேற்று அண்ணா நகர் மண்டலத்துக்குட்பட்ட அண்ணாநகர் ரவுண்டானா சாலையில் “Get Fit Chennai” நடைபயணம் மற்றும் சைக்கிள் பயணம் நடைபெற்றது.


சென்னை மாநகராட்சியின் ‘கெட் ஃபிட் சென்னை’ முயற்சியின் மூலம், சென்னையில் வசிக்கும் மக்களின் உடல்நலத்தை பேணும் வகையில், நகர மக்களிடையே அதிகாலையில் எழுந்து நடைபயிற்சி மேற்கொள்ளுதல் மற்றும் மிதிவண்டி ஓட்டுதல் உள்ளிட்ட உடற்பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் பழக்கத்தை ஊக்குவித்து “ஆரோக்கியமான சென்னையை” உருவாக்குவதே இதன் முக்கிய நோக்கமாகும்.


இந்த விழிப்புணர்வு நிகழ்வானது, 4 கிலோ மீட்டர் நடைபயணம், 8 கிலோமீட்டர் மிதிவண்டி பயணம், 10 கிலோமீட்டர் சைக்கிள் பந்தயம், அண்ணா நகர் ரவுண்டானா அருகில் தொடங்கி திருமங்கலம் சிக்னல் வழியாக மீண்டும் தொடக்க இடத்தை வந்தடைந்தது. இதில் இளைஞர்கள், மாணவர்கள் உள்ளிட்ட 750க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்குபெற்றனர். இந்நிகழ்வினில் கலந்து கொண்டவர்களுக்கு மத்திய வட்டார துணை ஆணையாளர் எச்.ஆர். கெளஷிக் பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினார். தமிழ்நாடு சைக்கிளிங் அசோசியேஷன் தலைவர் சுதாகர், அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


இந்நிகழ்வில் கலந்து கொண்ட பங்கேற்பாளர்களுக்கு டி-–ஷர்ட், சான்றிதழ், பதக்கங்கள் மற்றும் சிற்றுண்டிகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வானது சென்னையில் தொடர்ந்து நடத்தப்படவுள்ளது.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%