news Breaking News
clock

கலைமாமணி’ எஸ். சிவசூரியன் நூற்றாண்டு விழா: நாசர், விஷால் தலைமையில் கலைஞர்கள் புகழஞ்சலி

கலைமாமணி’ எஸ். சிவசூரியன் நூற்றாண்டு விழா: நாசர், விஷால் தலைமையில் கலைஞர்கள் புகழஞ்சலி


தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகரும், திராவிட சிந்தனையாளருமான, கலைமாமணி எஸ். எஸ்.சிவசூரியன் கலைக்கூடம் மற்றும் கலைமாமணி எஸ். எஸ்.சிவசூரியன் நூற்றாண்டு தொடக்க விழா தி.நகர், வாணி மஹாலில் நடைபெற்றது. இதில் திமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர். எஸ். பாரதி, செய்தித் தொடர்பு அணித் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.கே. எஸ்.இளங்கோவன், தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், நடிகரும், ஒளிப்பதிவாளருமான இளவரசு, எழுத்தாளரும் கதை சொல்லியுமான பாவா செல்லதுரை, நூற்றாண்டு விழா கொண்டாடும் கலைமாமணி எஸ். எஸ்.சிவசூரியனின் மகனும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவருமான கலைமாமணி பூச்சி எஸ்.முருகன் ஆகியோர் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்கள்.


திமுக இணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, துணை அமைப்புச் செயலாளர்கள் ஆஸ்டின், தாயகம் கவி, சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், தலைமை நிலைய செயலாளர் துறைமுகம் காஜா மற்றும் தென்னிந்திய நடிகர் சங்க பொதுசெயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் திரளான அரசியல், திரை பிரபலங்கள் கலந்துகொண்டு கலைமாமணி எஸ். எஸ்.சிவசூரியன் திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.


தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக செனட் உறுப்பினரும் வழக்கறிஞருமான மீனாட்சி முருகன் வரவேற்புரை ஆற்ற, நிகழ்ச்சியை வழக்கறிஞர் அருணா அசோக் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கலைமாமணி எஸ் எஸ் சிவசூரியன் பேரனும் வழக்கறிஞருமான சிவசூரியன் முருகன் செய்திருந்தார். திரை நாடகக் கலைஞர் அனந்த குமார் என்பவரின் கலைஞன் என்னும் தனி நபர் நாடகம் விழா முடிவில் நிகழ்த்தப்பட்டது.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News