குடும்பச் சண்டை வலுத்தது: லாலுவின் 3 மகள்களும் வீட்டைவிட்டு வெளியேறினர்

குடும்பச் சண்டை வலுத்தது: லாலுவின் 3 மகள்களும் வீட்டைவிட்டு வெளியேறினர்


ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத்தின் மகள் ரோஹிணி ஆச்சாரியா குடும்பச் சண்டையில் வீட்டை விட்டு வெளியேறினார். இந்நிலையில், அவரது மற்ற 3 சகோதரிகளும் பாட்னாவில் உள்ள லாலுவின் வீட்டை விட்டு வெளியேறியிருப்பதாகத் தெரிகிறது.


பீகார் சட்டமன்றத் தேர்தலில், ராஷ்ட்ரிய ஜனதா தளம் படுதோல்வியை சந்தித்திருக்கும் நிலையில், அக்கட்சியின் அடுத்த தலைவர் யார் என்ற போட்டி, குடும்பச் சண்டையாக வலுத்துள்ளது.


பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு மொத்தம் ஒன்பது பிள்ளைகள். இரண்டு மகன்களும், 7 மகள்களும் உள்ளனர். இதில் மூத்த மகள் மிசா பார​தி, 2-வது மகள் ரோகிணி ஆச்​சார்​யா, மகன்​கள் தேஜ் பிர​தாப் யாதவ், தேஜஸ்வி யாதவ் ஆகியோர் அரசி​யலில் உள்​ளனர்.


திடீரென மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவை லாலு பிரசாத் கட்சியிலிருந்து நீக்கினார்,லாலுவின் இளைய மகன் தேஜஸ்வி யாதவ் தற்போது, ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவராக செயல்பட்டு வருகிறார்.


தந்தைக்கு சிறுநீரகம்


தந்த மகள் ரோகிணி


சிறுநீரக செயலிழப்​பால் பாதிக்​கப்​பட்ட லாலு​வுக்கு கடந்த 2022-ம் ஆண்​டில் ரோகிணி சிறுநீரகத்தை தானமாக வழங்​கி​னார். இதைத் தொடர்ந்து கடந்த 2024-ம் ஆண்​டில் அவர் பீகார் அரசி​யலில் கால் பதித்​தார். அந்த ஆண்டு மக்​கள​வைத் தேர்​தலில் சரண் தொகு​தி​யில் போட்​டி​யிட்டு அவர் தோல்​வியை தழு​வி​னார். இதன்​பிறகு அவர் மீண்​டும் சிங்​கப்​பூருக்கு சென்​று​விட்​டார்.


பீகார் சட்​டமன்ற தேர்​தலை ஒட்டி அவர் மீண்​டும் பீகாருக்கு திரும்பி வந்​தார். இதற்கு தேஜஸ்வி யாதவ் கடும் எதிர்ப்பு தெரி​வித்​தார். எனினும் லாலு​வின் சமரசத்​தால் ரோகிணி, பீகார் தேர்​தலில் அதிதீ​விர​மாக பணி​யாற்​றி​னார். இந்த சூழலில் பீகார் தேர்​தலில் ஆர்​ஜேடி படு​தோல்வி அடைந்​தது. அந்த கட்சி 143 தொகு​திகளில் போட்​டி​யிட்ட நிலை​யில் 25 தொகு​தி​களில் மட்​டுமே வெற்றி பெற்​றது. தேர்​தல் தோல்வி தொடர்பாக ரோகிணி மீது தேஜஸ்வி குற்​றம் சாட்​டிய​தாகக் கூறப்​படு​கிறது.


குடும்பத்தினருக்குள் பல்வேறு கருத்துவேறுபாடுகள் இருந்து வந்த நிலையில் தற்போது பீகார் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு விஸ்வரூபம் எடுத்துள்ளது.


ரோகிணி நேற்று வெளி​யிட்ட பதிவு​களில் கூறி​யிருப்​ப​தாவது:– நேற்று (சனிக்​கிழமை) ஒரு மகள், சகோ​தரி, மனை​வி, ஒரு தாய் அவம​திக்​கப்​பட்​டாள். மிக​வும் மோச​மான வார்த்​தைகளால் திட்​டப்​பட்​டாள். (தேஜஸ்வி) காலணியை கழற்றி அடிக்​க​வும் முயற்சி செய்​தனர். ஆனால் நான் சுயமரி​யாதையை விட்​டுக் கொடுக்​க​வில்லை. வேறு வழி​யின்றி நேற்று (சனிக்​கிழமை) கண்​ணீர்​விட்டு நின்ற பெற்​றோரை​யும் சகோ​தரி​களையும் விட்டு பிரிந்து வந்​தேன். எனது தாய் வீட்​டில் இருந்து என்னை வெளி​யேற்​றி​விட்​டனர். நான் ஆதர​வற்று நிற்​கிறேன்’’ என அப்பதிவில் தெரிவித்தார்.


வீட்டை விட்டு வெளியேறிய ரோஹிணி, தன்னுடைய சிறுநீரகத்தை தந்தைக்கு தானமளித்ததால், தன் மீது வீண் பழி சுமத்தப்பட்டதாகவும் குற்றம்சாட்டியிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தன்னுடைய சகோதரிகள் ராகிணி, சாந்தா, ராஜலஷ்மி ஆகியோரும் பாட்னாவில் உள்ள பெற்றோரின் வீட்டை விட்டு வெளியேறியிருப்பதாகவும் ரோகிணி குறிப்பிட்டுள்ளார்.


சகோதரன் தேஜ் பிரதாப்


வேதனை...


பீகாரில் தேர்தல் தோல்வியை தொடர்ந்து ரோஹிணி வீட்டை விட்டு வெளியேறியிருப்பது குறித்து கருத்துக் கூறியிருக்கும் தேஜ் பிரதாப், நேற்று நடந்த சம்பவம் என்னை உலுக்கிவிட்டது. என்னுடைய சகோதரிக்கு நடந்திருக்கும் அவமானத்தை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.என்னை அவமானப்படுத்தினால் நான் தாங்கிக் கொள்வேன், ஆனால், அவரை அவமானப்படுத்தினால் தாங்க முடியாது. அவருக்கு நடந்த அவமரியாதை மிகவும் பயங்கரமானது என்றும் அவர் தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News