ஓ.பி.எஸ், தினகரன், செங்கோட்டையன் தி.மு.க.வின் ‘பி’ டீம்

ஓ.பி.எஸ், தினகரன், செங்கோட்டையன் தி.மு.க.வின் ‘பி’ டீம்



பசும்பொன், அக்.30–


ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், டிடிவி தினகரன் மூவரும் தி.மு.க.வின் ‘பி’ டீம் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.


இன்று எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.


மூன்று பேரின் சந்திப்பு பற்றி கேட்டதற்கு இது ஏற்கனவே திட்டமிடப்பட்டது தான். தெரிந்தது தான் என்று கூறினார்.


தி.மு.க. ஆட்சிக்கு வரும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார். இவர்கள் எப்படி இணைவார்கள் என்று எடப்பாடி கேட்டார்.


செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று நிருபர்கள் கேட்டனர்.


ஏற்கனவே அவரது கட்சி பதவி பறிக்கப்பட்டுள்ளது. அண்ணா தி.மு.க.வுக்கு யார் துரோகம் செய்தாலும் கட்சி தலைமையின் கொள்கை கருத்துக்களை கடைப்பிடிக்காவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் எடப்பாடி கூறினார்.


நெல் கொள்முதலில் ஸ்டாலின் பொய் சொல்கிறார். ஆண்டுக்கு 42 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்படவில்லை என்று அவர் கூறினார்.


தினசரி 600 மூட்டைக்கு மேல் கொள்முதல் செய்யவில்லை என்று விவசாயிகளே சொல்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.


நான் விரக்தியின் உச்சத்தில் இருப்பதாக முதலமைச்சர் ஒரு கருத்தை கூறி இருக்கிறார். அப்படி என்ன அவதூறு கூறினேன் என முதலமைச்சர் விளக்கமளிக்க வேண்டும். விவசாயிகள் சாலையில் நெல்லை குவித்து வைத்திருக்க வேண்டிய அவசியம் என்ன?அமைச்சர் சக்கரபாணி கூறியது போல் 2000 மூட்டைகள் கொள்முதல் செய்யப்படவில்லை. தினமும் 2000 மூட்டை நெல் கொள்முதல் செய்யப்பட்டிருந்தால் எந்த கொள்முதல் நிலையத்திலும் நெல் மூட்டைகள் தேங்கி இருக்காது.பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு முதலமைச்சர் நேரில் சென்று ஆறுதல் கூறவில்லை. திமுக ஆட்சியின் தான் ஆண்டுக்கு 42 லட்சம் டன் நெல் கொள்முதல் என கூறுவது பச்சை பொய். தமிழக அரசின் கொள்கை விளக்கக் குறிப்பில் நெல் கொள்முதல் குறித்து முரணான தகவல் கூறப்படுகிறது என்றும் அவர் கூறினார்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%