அப்பப்பா.. ஆண்டியப்பா
அய்யா நின்று கேளப்பா
செப்பப்பா மெய்யப்பா..
செட்டப்பு நிக்காதப்பா.!
ஓடப்பா.. கூரையப்பா..
ஏழைசனம் இருக்காரப்பா
ஆடப்பா.. மாடுபோல
அவர் வாழ்க்கை போகுதப்பா.!
எட்டுமாடிக் கூடமப்பா..
எப்புட்டு உசரமப்பா.!
சேட்டப்பா இங்கேவந்து
சேமமாக வாழுறான்பா!
ஒட்டுத்துணி கட்டிக்கிட்டு
உலகநாதன் கிடக்கிறான்பா..
ஓடப்பன் உயரப்பன்
ஆவதெந்த நாள்தானப்பா?
துட்டப்பா பேசுதப்பா..
தூரத்தே உண்மையப்பா
ஒத்த வார்த்தை பேசாது
ஊமையாகி நிக்குதப்பா
கட்டப்பாவும் எட்டப்பனும்
கைகோர்த்தக் காலமப்பா.!
நட்டமெல்லாம் யாருக்கென்று..
நன்றாக நீ யோசியப்பா!
சட்டத்திலும் ஓட்டையப்பா
சந்து பொந்து நுழைந்து அப்பா..
எட்டிய இடத்திலெல்லாம்
இரக்கமின்றி ஆடுதப்பா!
ஒட்டிய வயிற்றுடனே..
ஒருவாய் கஞ்சிக்காக
கிட்டிய எச்சில் இலை
இருப்பதனை உண்டுகொண்டு..
பட்டியுள்ள மாடுகளாய்
பலர்வாழ்க்கை இருக்குதப்பா.!
வட்டிக்கடை வாசலிலே.
சாமான்ய ஜனங்களப்பா!
ஓடப்பர் எப்போது
உயரப்பர் ஆவாரப்பா?
ஒப்பப்பர் ஆவதற்கும்
உலகத்தில் வழியேதப்பா?
கூடப்பா ஒன்றுசேர்ந்து
குவிந்திட்ட செல்வமெல்லாம்
ஒவ்வொருவருக்கும் இங்கு..
பிரிக்கத்தான் வேண்டுமப்பா!
நாடப்பா .. நமதுநாட்டில்
நல்லவர்கள் வாழணும்பா..
பாடப்பா.. பழனியப்பா..
பாரதியார் நாம்தானப்பா!
*வே.கல்யாண்குமார்*
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?