💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
இதயத்தின் புரிதலில்
இதழ்கள் விரியும்
மனதைக் காட்டும்
மாயக் கண்ணாடி
அகத்தை முகத்தில் காட்டி
அன்பை வெளிப்படுத்தும்
நோயில்லா வாழ்வுக்கு
அருமருந்து
மகிழ்ச்சி வெளிப்பாடாய்
ஆன்லைன்
மனதில் தோன்றும்
உன்னதப் புன்னகை
வலியை மறைத்து
வெளியில் காட்டும்
போலிப் புன்னகை
உடனிருப்போர் நடத்தையால்
உதட்டில் வரும்
கேலிப் புன்னகை
எதிரிலிருப்போரை
குறைவாக எண்ணி
இழிவில் வரும்
ஏளனப் புன்னகை
மற்றவர் உயர்வில்
மனம் மகிழ்ந்து
உதட்டில் வரும்
உற்சாகப் புன்னகை
புன்னகையில் வகைகள்
பலவுண்டு
விலையும் அதற்கு சிலவுண்டு
உண்மைப் புன்னகை ஒன்றுண்டு
உள்ளம் மட்டுமே கண்டதுண்டு.

தமிழ்நிலா
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%