ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 28,000 கனஅடி

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 28,000 கனஅடி

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து வெள்ளிக்கிழமை வினாடிக்கு 28,000 கனஅடியாக குறைந்தது.


கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீா் வெளியேற்றப்பட்டு வந்ததால்,தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு கடந்த சில நாள்களாக நீா்வரத்து அதிகரித்தது.


இந்நிலையில். வியாழக்கிழமை 32,000 கனஅடியாக இருந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி வினாடிக்கு 28,000 கனஅடியாக நீா்வரத்து குறைந்து தமிழக கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக வந்து கொண்டிருக்கிறது.


இருப்பினும், ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கும், காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்வதற்கும் விதிக்கப்பட்டிருந்த தடையை 17 நாளாகவும் மாவட்ட நிா்வாகம் விதித்த தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளது.


காவிரி ஆற்றில் நீா்வரத்து அளவுகளை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%