பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கு
Jul 12 2025
13

அரியலூர், ஜூலை 10-
அரியலூரிலுள்ள ஒரு தனியார் கூட்டரங்கில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில் 3 நாள்கள் நடைபெறும் கருத்தரங்கு புதன்கிழமை தொடங்கிது. இந்த கருத்தரங்கை கோட்டாட்சியர் கோவிந்தராஜ் தொடக்கி வைத்துப் பேசினார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சரவணன், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு உறுப்பினர்கள் கோமதி, அல்லி ஆகியோர் கலந்து கொண்டு பணியிடத்தில் பாலியல் தொந்தரவுகளுக்கு எதிரான சட்டங்கள் மற்றும் வரதட்சணை தடுப்பு, குடும்ப வன்முறை தடுப்பு ஆகிய சட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்த கருத்தரங்கில், நாகை மற்றும் அரியலூர் மாவட்டத்தைச் சாரந்த அரசு மற்றும் பிற துறை சார்ந்த பெண் பணியாளர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட சமூக நல அலுவலர் அனுராபூ நடராஜமணி வரவேற்றார்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?