சென்னை: புழல் சிறையில் உள்ள இலங்கை கைதியை அவரது குடும்பத்தினர் சந்திக்க அனுமதி அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புழல் சிறையில் உள்ள இலங்கையைச் சேர்ந்த கைதி புஷ்பராஜ், குடும்பத்தினரை சந்திக்க அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் இலங்கையில் உள்ள தனது தாயுடன் தொலைபேசி மூலம் பேச முறையாக அனுமதிக்கவில்லை என தெரிவிக்கப் பட்டது. சிறைகளில் உள்ள வெளிநாட்டினர் தங்களது குடும்பத் தினரை சந்திக்க, தொலைபேசி மூலம் பேச விதிகள் உள்ளன என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதி மன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%