சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: சிபிஐ பதிலளிக்க உத்தரவு!

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: சிபிஐ பதிலளிக்க உத்தரவு!


 

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சிபிஐ பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.


கடந்த 2020-ஆம் ஆண்டில் தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர்கள் ஜெயராஜ், அவரது மகன் பெனிக்ஸ் ஆகியோரை போலீஸார் சட்டவிரோதக் காவலில் வைத்துத் தாக்கினர். இதில் தந்தை, மகன் இருவரும் உயிரிழந்தனா்.


இதுதொடர்பாக காவல் ஆய்வாளர் ஸ்ரீதா், உதவி ஆய்வாளா்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்பட 9 போ் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கின் விசாரணை மதுரை மாவட்ட சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.


இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கின் விசாரணையை விரைவில் முடிக்கக் கோரி இறந்த ஜெயராஜ் மனைவி ஜெயராணி சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார்.


இவ்வழக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, “ஜெயராஜ், பென்னிக்ஸ் கொல்லப்பட்ட வழக்கின் விசாரணையை முடிக்க 6 மாதம் அவகாசம் வேண்டும்” என்று சிபிஐ தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.


இந்த நிலையில், “மேலும் ஆறு மாத கால அவகாசம் எதற்காக வேண்டும்? என்பது குறித்து பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்" என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%