கரூர் கூட்ட நெரிசல் வழக்கு 3டி லேசர் ஸ்கேனர் கருவியுடன் சிபிஐ ஆய்வு

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு 3டி லேசர் ஸ்கேனர் கருவியுடன் சிபிஐ ஆய்வு



கரூர், அக்.31- கரூரில் தவெக பிரச்சார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான வழக்கை சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட தைத் தொடர்ந்து, ஐபிஎஸ் அதிகாரி பிரவீன் குமார் தலைமையிலான சிபிஐ அதிகாரிகள் குழுவினர் வெள்ளிக்கிழமை வேலுச்சாமிபுரத்தில் ஆய்வு மேற்கொண்டனர். 3டி லேசர் ஸ்கேனர் கருவியுடன் சிபிஐ அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற் கொண்டு வருகின்றனர். நெரிசல் ஏற்பட்ட இடத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினரிடம் சிபிஐ அதிகாரிகள் விளக்கம் கேட்டனர். வேலுச்சாமிபுரம் பொதுமக்கள் மற்றும் வணி கர்களிடம் சாட்சியங்கள் பெற சிபிஐ சம்மன் அனுப்பி யதை அடுத்து 4 பேர் விசா ரணைக்கு ஆஜராகியுள்ள னர். கடந்த அக்.16 ஆம் தேதி கரூருக்கு வந்த சிபிஐ அதி காரிகள், 1,316 பக்கங்கள் கொண்ட ஆவணங்களை சிறப்பு புலனாய்வுக் குழுவின ரிடம் இருந்து பெற்றனர். தீபாவளி விடுமுறை க்குப் பின்னர் வியாழக்கிழ மை மீண்டும் கரூருக்கு வந்த அதிகாரிகள், இரண்டாம் கட்ட விசாரணையை மேற் கொண்டு வருகின்றனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%