டெஸ்ட், ஒருநாள், டி-20 போட்டிகளில் பங்கேற்க தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தின் தொடக்க நிகழ்வான 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம், மேற்குவங்க மாநிலத்தின் தலை நகர் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் வெள்ளிக்கிழமை அன்று காலை 9:30 மணிக்கு தொடங்குகிறது.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடம் : ஈடன் கார்டன், கொல்கத்தா / நேரம் : காலை 9:30 சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜியோ ஸ்டார்
ஆடவர் இளையோர் உலகக்கோப்பை ஹாக்கி
சென்னை - மதுரை 2025
இன்னும் 13 நாட்கள்
ஜெர்மனி ஆதிக்கம்
ஆடவர் இளையோர் உலகக்கோப்பை ஹாக்கி தொடரின் 14ஆவது சீசன் நவம்பர் 28 முதல் டிசம்பர் 10ஆம் தேதி வரை தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களான சென்னை மற்றும் மதுரையில் நடைபெற உள்ளது. இதில் போட்டியை நடத்தும் இந்தியா உட்பட 24 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த உலகக் கோப்பை தொடரில் ஜெர்மனி தான் ஆதிக்கம் செலுத்துகிறது. அந்நாடு இதுவரை 7 முறை (1982, 1985, 1989, 1993, 2009, 2013, 2023) சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. அதற்கு அடுத்தப்படியாக இந்தியா (2001, 2016) மற்றும் அர்ஜெண்டினா (2005, 2021) தலா 2 முறையும், ஆஸ்திரேலியா (1997), பாகிஸ்தான் (1979) தலா ஒரு முறையும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளன. ஆஸ்திரேலியா அணி அதிக பட்சமாக 3 முறை (1982, 1989, 2005) இறுதிப்போட்டிக்கு முன்னேறி கோப்பையை இழந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆட்டம் அனல் பறக்கும் ஆடவர் இளையோர் உலகக்கோப்பை ஹாக்கி தொடரில் 21 வயதிற்குட்பட்ட இளசுகள் மட்டும் பங்கேற்பதால் வழக்கம் போல நடப்பு சீசன் போட்டிகள் அதிரடி ஆட்டத்தால் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் இந்தியா, ஜெர்மனி, அர்ஜெண்டினா வீரர்களின் அதிரடி ஆட்டம் பிரமிக்கும் வகையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?