
-வி.கே.லக்ஷ்மிநாராயணன்
அறைக்குள் நுழைந்த கேசவ் மகள் ஷாலினியின் உண்டியல் திறந்தி ருப்பதைக் கண்டான். சந்தேகத்துடன் அருகில் சென்று உண்டியலை எடுத் துப் பார்த்தான். சுத்தமாய்துடைத்து விட்டாற்போல் காலியாக இரு
ந்தது ! ஆச்சரியம் கலந்த கடுப்பு
உண்டாயிற்று கேசவுக்கு!
தனக்குக் கொடுத்த பாக்கெட் மணி யில் முக்கால்வாசிப் பணத்தை அந்த உண்டியலில்தான் போட்டு வந்தாள் ஷாலினி.எப்படியும் 500 ரூபாயாவது சேர்ந்திருக்கும். இப்போது உண்டிய லே காலியாகஇருக்கிறது. இவ்வளவு பணம் செலவு செய்ய அப்படி என்ன அவசியம் வந்தது! அதுவும் தன்னிடம் கூட சொல்லாமல்...
கேசவுக்கு லேசாக கோபம் எட்டிப் பார்த்தது. " ஷாலு..." கத்தினான்.
உடனே ஷாலினி என்னவோ ஏதோ என பயந்து ஓடி வந்தாள்.
" என்ன டாடி ?"
கேட்டவள் கண்ணில் தந்தை வைத்திருந்த உண்டியல் பட்டது. விஷயமும் புரிந்தது.
" உன் சேமிப்பு பணம் எங்கே ? உண்டி
யல் காலியா இருக்குது ! " குரலில் கோபம் கொந்தளித்தது.
இது காதில் விழ அடுக்களை யிலிருந்து வெளிப்பட்ட பத்மா கண வன் அருகில் வந்து நின்றாள்.
" இப்போ எதுக்கு இப்படி சத்தம் போடறீங்க ! உண்டியல் பணத்த நான்தான் எடுத்தேன் !"
" ஏன்...அப்படி என்ன அர்ஜண்டான செலவு ?"
" சொல்றேங்க ! வேலைக்காரி அம்சா
வந்து ஒரு குரல் எடுத்து அழுதாள்..."
" என்னவாம் ?"
" அவளோட குழந்தைக்கு மூணுநாளா
நல்ல காய்ச்சலாம்.! கையில பைசா இல்ல. டாக்டர் கிட்ட கூட்டிக்கிட்டுப் போகணும் அடவான்ஸ் பணம் கிடைக்குமான்னு கெஞ்சினாள். பார்க்கப் பாவமா இருந்தது. என்கிட்ட ரூபா இல்ல அப்போ ஷாலுதான் உண்டியல்ல இருக்கற மொத்தப் பணத்தையும் எடுத்துக் கொடுத்தா.
ம்..550 ரூபா இருக்கும். நன்றியோடு அந்தப்பணத்த வாங்கிண்டு போனா ங்க!"
கேசவ் முகம் இயல்பு நிலைக்குத் திரும்பியது. முகத்தில் புன்னகை அரும்பியது.
" குட் ! சேமிப்பு நமக்கு மட்டும் கிடையாது. மற்றவர்களுக்கும் என்பது புரிஞ்சு செயல்பட்டிருக்கீங்க ரெண்டுபேரும். அதுவும் கஷ்டப்ப டறவங்களுக்கு கொடுக்கறது பெரிய புண்ணியம் ! நான் ஏதோ ஷாலு தண்ட செலவு செய்திட்டாளோன்னு சந்தேகப்ப ட்டுதான் கொஞ்சம் கோவமாநடந்துக்கிட்டேன். சாரிடா என் செல்லம்!"?குனிந்து மகள் தோளை பாசத்துடன் தட்டிவிட்டான் கேசவ்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?