ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பி. உட்பட 12 பேர் கைது: மதுபான ஊழல் வழக்கில் ஜெகன் மோகன் ரெட்டிக்கு நெருக்கடி

ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பி. உட்பட 12 பேர் கைது: மதுபான ஊழல் வழக்கில் ஜெகன் மோகன் ரெட்டிக்கு நெருக்கடி

அமராவதி:

ஆந்​திர மாநிலத்​தில் ஜெகன்​மோகன் ரெட்​டி​யின் கடந்​த​கால ஆட்​சி​யின்​போது ரூ.3,500 கோடி மது​பான ஊழல் நடந்ததாக சிறப்பு ஆய்வு குழு தெரி​வித்​துள்​ளது. இதுதொடர்​பாக ஜெகன் கட்​சியை சேர்ந்த ஒரு எம்பி உட்பட 12 பேர் கைது செய்யப்​பட்​டுள்​ளனர். இதனால் ஜெகன் மோகன் ரெட்​டிக்கு நெருக்​கடி முற்​றி​யுள்​ளது.


ஆந்​திர மாநிலத்​தில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை ஜெகன்​மோகன் ரெட்டி முதல்​வ​ராக இருந்​தார். அப்​போது, தமிழகத்தை போன்று ஆந்​தி​ரா​விலும் அரசே மதுக்​கடைகளை ஏற்று நடத்​தி​யது. அப்​போது புதுப்​புது ‘பி​ராண்ட்’ கள் புழக்கத்துக்கு வந்​தன.


மது​பான கடைகளில் அனைத்​தும் டிஜிட்​டல் பணப் பரி​மாற்​றத்​துக்கு பதில் வெறும் ரொக்​கம் மட்​டுமே பெறப்​பட்​டது. இதனால், கோடிக் கணக்​கில் பணம் கை மாறு​வ​தாக குற்​றச்​சாட்டு எழுந்​தது. இது தவிர, மது​பானங்​களும் மிக​வும் தரமற்ற வகை​யில் இருந்த​தாக​வும் கூறப்​பட்​டது.


இந்​நிலை​யில், ஆந்​தி​ரா​வில் ஆட்சி மாறியதும், மது​பான விற்​பனை ஊழல் குறித்து விசா​ரிக்க சந்​திர​பாபு அரசு சிறப்பு விசாரணை குழுவை நியமித்​தது. இக்​குழு தீவிர விசா​ரணையை மேற்​கொண்டு 305 பக்க முதற்​கட்ட விசா​ரணை அறிக்​கையை நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​தது. ஜெகன்​மோகன் ரெட்டி ஆட்சி காலத்​தில் ரூ.3,500 கோடி ஊழல் நடந்​த​தாக சிறப்பு விசா​ரணை குழு தனது அறிக்​கை​யில் தெரி​வித்​து உள்​ளது.


இதில் முன்​னாள் முதல்​வர் ஜெகன்​மோகன் ரெட்​டி​யும் குற்​ற​வாளி என குறிப்​பிடப்​பட்​டுள்​ளது. மாதா மாதம் ரூ.50 கோடி முதல் ரூ.60 கோடி வரை வசூலிக்​கப்​பட்​டு, அப்​பணம் முதல்​வ​ராக இருந்த ஜெக​னுக்கு தனிப்​பட்ட நபர்​கள் மூலம் வழங்​கப்​பட்​ட​தாக ஆதா​ரப்​பூர்​வ​மாக குற்​றம் சாட்​டப்​பட்​டுள்​ளது.


இதில், கேசிரெட்டி ராஜசேகரரெட்டி என்​பவர் முதல் குற்​ற​வாளி​யாக​வும், இதற்கு மூளை​யாக​வும் செயல்​பட்டு உள்​ளார். மது​பான ஊழல் பணத்​தில் கடந்த 2024-ல் ஆந்​தி​ரா​வில் நடந்த தேர்​தலுக்கு ஒய்​எஸ்​ஆர் காங்​கிரஸ் கட்சி ரூ.250 கோடி முதல் ரூ.300 கோடி வரை சந்​திரகிரி முன்​னாள் எம்​.எல்.ஏ செவிரெட்டி பாஸ்​கர் ரெட்டி மூல​மாக செல​விட்​டுள்​ளது.


மேலும், இந்த ஊழல் பணத்​தில் துபாய், தென் ஆப்​பிரிக்க நாடு​களில் 30 போலி நிறு​வனங்​கள் மூலம் தங்​கம், ரொக்​கம், சொகுசு பங்​களாக்​கள் மீது முதலீடு செய்​துள்​ளனர். இந்த வழக்​கில் சிறப்பு விசா​ரணை குழு இது​வரை ஜெகன் கட்​சியை சேர்ந்த ராஜம்​பேட்டை எம்பி மிதுன்​ரெட்டி உட்பட 12 பேரை கைது செய்​துள்​ளது.


ரூ.62 கோடி சொத்​து பறிமுதல்: மேலும், ரூ.62 கோடி மதிப்​புள்ள சொத்​துகளை​யும் சிறப்பு விசா​ரணை குழு கைப்​பற்றி உள்​ளது. இது தொடர்​பாக இது​வரை 268 சாட்​சிகளை​யும் விசா​ரித்​துள்​ளது. ஆனால் இவை அனைத்​துமே அரசி​யல் பழி​வாங்​கும் நடவடிக்கை என்​றும், மக்​களை திசை திருப்​புவதற்​காக சந்​திர​பாபு நா​யுடு அரசு இவ்​வாறு செயல்​படு​வ​தாக ஒய்​எஸ்​ஆர்​ காங்​கிரஸ்​ கட்​சி குற்​றம்​ சாட்​டி உள்​ளது.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%