😟 😟
நேற்று இரவு அடித்த புயல் காற்றில் வீட்டின் கூரை பறந்தது
மண் சுவர் மண்ணோடு மண்ணாகியது.
இருந்த ஓரிரு தட்டு முட்டு சாமான்கள் போன இடம் தெரியவில்லை.
பிள்ளைகளோடு மலையடிவாரத்திற்கு வந்தாயிற்று.
வீரன் தன் வாலைச் சுருட்டிக் கொண்டு பசி மயக்கத்தில் படுத்திருந்தது.
முனிசிபாலிடி வண்டி வந்து வீரனைப் தூக்கி ப் போட்டுக் கொண்டு போனதைப் பார்த்தான்.
மாடசாமி
அதற்குக் கூட போக்கிடம் என்று, ஒன்றுள்ளதே; என்று மகிழ்ந்தான்.
இனி எப்படி பிழைப்போம் ; என்று மனைவி எச்சுமியிடம் கேட்டான்.
எச்சுமி தன் சேலை மடிப்பிலிருந்து ரேஷன் கார்டையும் ஆதார் கார்டையும் வாக்காளர் அட்டையையும் காண்பித்தாள்.
மாடசாமிக்கு அழுகையும் சிரிப்பு மாக முகம் கோணியது.

சசிகலா விஸ்வநாதன்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?