சிரிப்பில் இருக்கு இன்பம்..

சிரிப்பில் இருக்கு இன்பம்..


மனதிற்கு சாந்தம் வேண்டுமா ...

தினம் ஒரு முறையேனும் வாய் விட்டு சிரித்து விடு 

மக்களை மாக்களில் இருந்து பிரித்துக் காட்டுவதே சிரிப்பு என்ற ஒரு அருமையான உணர்வு என்பதை உணர்வாயா..

புன்னகையில் இருக்குது பரவசம்

மங்காத செல்வம் சிரிப்பு 

சிரிப்பில் தீருமே பல பிரச்சனை 

உணர்ந்தோர் சிரிக்க மறுப்பதில்லையே...

ஜகத்தில் ஜனித்தோம் ஒருமுறை ..

முகமும் அகமும் மலர சிரிப்போம் ..

அடுத்தவர் வேதனை தீர ஆறுதல் சொல்லி புன்னகைப்போம் ..

சிரிப்பதற்கு பணம் வேண்டாம்

பூரிப்பான மனம் போதுமே ..


உஷா முத்துராமன்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%