ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் 9 வயது மாணவி ஒருவர் கடந்த 1-ம் தேதி 4-வது மாடியில் இருந்து குதித்து இறந்தார். இது தொடர்பாக விசாரணை நடத்த ராஜஸ்தான் பள்ளி கல்வித்துறை 5 பேர் குழுவை அமைத்தது.
இறந்த மாணவியின் பெற்றோர் கூறுகையில், ‘‘எங்களது மகளை உடன் படிக்கும் மாணவிகள் சிலர் தகாத வார்த்தைகளை கூறி திட்டி துன்புறுத்தி வந்துள்ளனர். இது தொடர்பாக பல முறை புகார் தெரிவித்தும், பள்ளி ஆசிரியர்கள் கண்டு கொள்ளவில்லை. பள்ளி நிர்வாகமும் நடவடிக்கை எடுக்கவில்லை’’ என்றனர்.
வகுப்பறையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமிராவில், இறந்த மாணவி மாடியிலிருந்து குதிப்பதற்கு முன்பாக 2 முறை அவரது ஆசிரியையை நோக்கி சென்றது பதிவாகியுள்ளது. ஆனால்அதில் ஆடியோ பதிவாகவில்லை. சிபிஎஸ்இ விதிமுறைகளில் வகுப்பறை சிசிடிவி பதிவுகள் ஆடியோவுடன் இருக்க வேண்டும் என்பது கட்டாயம். ஆனால், இந்த விதிமுறை மீறப்பட்டுள்ளது.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?