உலக துப்பாக்கி சுடுதலில்: தங்கம் வென்றார் ரவீந்தர்

உலக துப்பாக்கி சுடுதலில்: தங்கம் வென்றார் ரவீந்தர்



கெய்ரோ: எகிப்து நாட்டின் கெய்ரோ நகரில் ஐஎஸ்எஸ்எஃப் உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான 50 மீட்டர் ஃப்ரீ பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ரவீந்தர் சிங் 569 புள்ளிகளை குவித்து முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார்.


இந்திய ராணுவத்தில் ஹவில்தாராக பணியாற்றி வரும் 29 வயதான ரவீந்தர் சிங், ஆடவருக்கான 50 மீட்டர் ஃப்ரீ பிஸ்டல் அணிகள் பிரிவில் கமல்ஜீத், யோகேஷ் குமார் ஆகியோருடன் இணைந்து 1,646 புள்ளிகளை குவித்து வெள்ளிப் பதக்கமும் வென்றார்.


மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் இளவேனில் வாலறிவன் 232 புள்ளிகளுடன் 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார். தென் கொரியாவின் ஹியோஜின் 255 புள்ளிகளுடன் தங்கப் பதக்கமும், சீனாவின் வாங் ஜிஃபி 254 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் பெற்றனர்.


அணிகள் பிரிவில் இளவேனில் வாலறிவன், மேகனா சஜ்ஜனார், ஸ்ரேயா அகர்வால் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி 1893.3 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் கைப்பற்றியது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%