225 படுக்கை வசதிகளுடன் திருச்செங்கோடு அரசு மருத்துவமனை: ஸ்டாலின் திறந்தார்
சென்னை, நவ.5–
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் 23 கோடி ரூபாய் செலவில் தரை மற்றும் நான்கு தளங்கள் கொண்ட புதிய மருத்துவக் கட்டடம் கட்டப்பட்டு, 225 படுக்கை வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட திருச்செங்கோடு அரசு மருத்துவமனையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் காணொலிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
மே 2021-ல் தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பின், திருச்செங்கோடு பகுதி மக்களின் நலன்கருதி, திருச்செங்கோடு அரசு மருத்துவமனையை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு இணையாக தரம் உயர்த்தும் பொருட்டு 2023–ம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டு, 23 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி, தரைத்தளத்துடன் கூடிய 4 தளங்களுடன் இப்புதிய மருத்துவக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. 150 படுக்கைகள் அதிகரித்து, மொத்தம் 225 படுக்கைகள்.
இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் ப.செந்தில்குமார், தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் அருண் தம்புராஜ், தமிழ்நாடு சுகாதார திட்டத்தின் திட்ட இயக்குநர் சு.வீனித் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
நாமக்கல்மாவட்டத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் வி.எஸ்.மாதேஸ்வரன், சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர். ஈஸ்வரன், கலெக்டர் துர்காமூர்த்தி, ஊரக நலப் பணிகள் இயக்குநர் த.க.சித்ரா, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?