சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து துணைத் தேர்தல் ஆணையர் ஆய்வு

சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து துணைத் தேர்தல் ஆணையர் ஆய்வு


சென்னை


செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து துணைத் தேர்தல் ஆணையர் ஆய்வு செய்தார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-


தமிழ்நாடு முழுவதும் நேற்று முதல் கணக்கீட்டுப் படிவங்கள் விநியோகத்துடன் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக வரைவு வாக்காளர் பட்டியலில் சேர்க்க தகுதியுள்ள குடிமக்களிடமிருந்து கணக்கெடுப்பு படிவங்களை விநியோகித்து சேகரிப்பதை எளிதாக்குவதற்காக 68,467 வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் 7,234 வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் மேற்பார்வையாளர்கள் களத்தில் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தின் துணைத் தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ் எத்துரு மற்றும் இயக்குநர் கிருஷ்ண குமார் திவாரி ஆகியோர் இன்று செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மற்றும் வேலூர் மாவட்டங்களின் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தனர். இம்மாவட்டங்களின் மாவட்ட தேர்தல் அதிகாரிகள், துணை தேர்தல் ஆணையரால் நடத்தப்பட்ட ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றனர்.


மேலும், சிறப்பு தீவிர திருத்தச் செயல்முறையை சுமூகமாக நடத்துவதை உறுதி செய்வதற்கும், விரிவான மற்றும் பிழையற்ற வாக்காளர் பட்டியலை தயாரிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்கும், சென்னை பெருநகர மாநகராட்சி, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கணக்கீட்டுப் படிவங்களின் விநியோகம் குறித்து துணைத் தேர்தல் ஆணையர் கள ஆய்வு நடத்தினார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%