ஹைக்கூ கவிதைகள் -

ஹைக்கூ கவிதைகள் -



(தமிழ்நாடு இபேப்பர்.காம்)


1) நன்றி விசுவாசம்.

இலைகளில் ஏந்தியது

மழைநீரை மரம்.


2) வற்றிய கிணறுகள்

நிரம்பிச் சிந்துகின்றன சாலையில்

குடிநீர் லாரிகள்.


3) காதினைத் திருகத் திருக

காதுக்கு இனிமை தந்தது

வானொலிப் பெட்டி.


4) அழுக்குத் தீரக் குளியல்.

அழுக்காடையே மீண்டும் உடை

இயந்திரப் பழுதாளன்.


5) பௌர்ணமி இரவு

நகரும் மேகங்கள்

ஒளிந்து விளையாடும் நிலா.



மு.மகேந்திர பாபு,

மதுரை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%