சீனாவை பின்னுக்கு தள்ளி அரிசி உற்பத்தியில் இந்தியா முதலிடம்

சீனாவை பின்னுக்கு தள்ளி அரிசி உற்பத்தியில் இந்தியா முதலிடம்


புதுடெல்லி: சீ​னாவை மிஞ்சி உலகின் மிகப் பெரிய அரிசி உற்​பத்தி நாடாக இந்​தியா மாறி​யுள்​ளது என மத்​திய வேளாண்​துறை அமைச்​சர் சிவ​ராஜ் சிங் சவு​கான் தெரி​வித்​துள்​ளார். புதிய வகை பயிர்​களை வெளி​யிடும் நிகழ்ச்​சி​ டெல்​லி​யில் நடை​பெற்​றது.


இதில் 25 பயிர்​களின் 184 புதிய வகை களை அமைச்​சர் சவு​கான் வெளி​யிட்​டார். இதில் 122 தானி​யங்​கள், 24 வகை பருத்​தி, 13 வகை எண்​ணெய் வித்​துக்​கள், 11 வகை மாட்​டுத் தீவனங்​கள், பருப்பு மற்​றும் கரும்​பில் தலா 6 வகைகள், சணல் மற்​றும் புகை​யிலை​யில் தலா 1 வகை​யை​யும் அவர் வெளி​யிட்​டார்.


இந்​நிகழ்ச்​சி​யில் அமைச்​சர் சிவ​ராஜ் சிங் சவு​கான் பேசி​ய​தாவது: இந்த புதிய வகை வித்​துக்​கள், விவ​சா​யிகளுக்கு அதிக மகசூல், அதிக வரு​வாய் தரக்​கூடிய​வை. இந்த புதிய வகை பயிர்​கள் விவ​சா​யிகளிடம் விரை​வில் சென்​றடைவதை வேளாண் அதி​காரி​கள் உறுதி செய்ய வேண்​டும்.


அரிசி உற்​பத்​தி​யில் சீனாவை மிஞ்சி இந்​தியா மிகப் பெரிய நாடாக உரு​வெடுத்​துள்​ளது. கடந்த 2024-25-ம் ஆண்​டில் இந்​தியா 150.18 மில்​லியன் டன்​ அரிசி உற்​பத்தி செய்​தது. இதே காலத்​தில் சீனா​வின் அரிசி உற்​பத்தி 145.28 மில்​லியன் டன்​களாக இருந்​தன. இவ்​வாறு அவர் கூறி​னார்.


இந்​நிகழ்ச்​சி​யில் தேசிய விதைகள் கார்​ப்பரேஷன் (என்​எஸ்​சி) தலை​வர் மற்​றும் நிர்​வாக இயக்​குநர் டாக்​டர் மனீந்​தர் கவுர் திவிவே​தி, என்​எஸ்​சி​யின் கடந்​தாண்​டின் இறுதி ஈவுத் தொகை ரூ.33.26 கோடிக்​கான காசோலை​யை வழங்​கி​னார்​.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%