1. இந்த உலகில் நல்லவன் கடைசியில்தான் ஜெயிக்கிறான்
அதற்குள் கெட்டவன் நன்றாக வாழ்ந்து விட்டு போய் விடுகிறான்
2. அமைதியாக இருப்பது மிகப்பெரிய சக்தி
அதை மட்டும் நீங்கள் கற்றுக் கொண்டால் நீங்கள் வாழ்க்கையை
வென்று விடலாம்
3. காரில் போகிறவனை பார்த்து கவலைப்பட வேண்டாம்
கால் இல்லாதவன் உன்னை கடந்து போவதை கண் திறந்து பார் அப்போது உனக்கு வாழ்க்கை என்னவென்று புரியும்
4. நேரத்தில் கை கொடுப்பவர்கள்
தூரத்தில் தெரியும் கடவுளுக்கு சமம்
5. கைக்கும் கண்ணுக்கும் உள்ள உறவைப் போல் இருக்க வேண்டும்
கையில் காயம் ஏற்பட்டால் கண் அழும்
கண் அழுதால் கை கண்ணீரை துடைக்கும்
6. வாழ்க்கையில் அதிகம்
திட்டமிடாதீர்கள் ஏனெனில்
எல்லாம் ஏற்கனவே எழுதப்பட்டவை தான்

நடேஷ் கன்னா
கல்லிடைக்குறிச்சி
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?