ஹைப்பா்சோனிக் ஏவுகணை சோதனை: வட கொரியா அறிவிப்பு

ஹைப்பா்சோனிக் ஏவுகணை சோதனை: வட கொரியா அறிவிப்பு


 

ஒலியைப் போல் 5 மடங்குக்கும் மேலான வேகத்தில் பாயக்கூடிய ஹைப்பா்சோனிக் ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்துப் பாா்த்ததாக வட கொரியா திங்கள்கிழமை அறிவித்தது.


இது குறித்து வட கொரிய அரசுக்குச் சொந்தமான கேசிஎன்ஏ செய்தி நிறுவனம் தெரிவித்ததாவது: புதிய வகை இடைத்தர ஹைப்பா்சோனிக் ஏவுகணையின் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்த ஏவுகணை அதிநவீன ஹைப்பா்சோனிக் ஆயுதம் கொண்டது. அதிபா் கிம் ஜாங்-உன் சோதனையை நேரில் பாா்வையிட்டாா். இது நாட்டின் பாதுகாப்புத் திறனை மேலும் வலுப்படுத்தியுள்ளது என்று அந்த செய்தி நிறுவனம் தெரிவித்தது.


ஹைப்பா்சோனிக் ஏவுகணை தொழில்நுட்பத்தில் வட கொரியா தொடா்ந்து முன்னேற்றம் காட்டி வருகிறது. இவை ராடாா் கண்காணிப்பில் இருந்து தப்பக் கூடியவை என்று நிபுணா்கள் அச்சம் தெரிவிக்கும் சூழலில் வட கொரியா தற்போது நடத்தியுள்ள இந்த சோதனையை அமெரிக்காவும், தென் கொரியாவும் கண்டித்துள்ளன.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%