🫰🏽🫰🏽
தாத்தாவை விரல் பிடித்து பூங்காவில் நடைப் பயிற்சிக்காகக் கூட்டிப் போனான்; பெயரன்.
தாத்தாவிடம் ஏதேதோ பேசிக்கொண்டிருந்த பெயரன்' தாத்தா! நான் என்னவா ஆகணும்ன்னு நீங்க ஆசைப்படறீங்க? நான் என்னவா ஆவேன்; என்று, நீங்க நினைக்கிறீங்க? அம்மா நான் ஐ. பி. ஸ்' ஆஃபிஸராக ஆகணும்ன்னு சொல்றாங்க. அப்பா சொல்றாங்க, ' நீ டாக்டராகணும் டா'. பெரியப்பா' நீ என்னை மாதிரி சிவில் வழக்கு வக்கீல் ஆகணும். அதுக்கு உன்னை நான் தயார் படுத்தறேன்'னு சொல்றாங்க. எனக்கு என்ன செய்யறதுன்னு தெரியவில்லை. ஒரே குழப்பமாயிருக்கு. என்ன செய்யறது?' என்று கேட்டான்.
எட்டு வயது பேரனிடமிருந்து இத்தனை கூர்மையான வினாவை தாத்தா எதிர் பார்க்கவே இல்லை!
ஒரு கணம் யோசித்த தாத்தா' நீ ரொம்ப கெட்டிக்காரன்டா! இங்லீஷ்லே நீங்க சொல்வீங்களே' ஸ்மார்ட் ' ; அதுதான்' நீ ஒரு ஸ்மார்ட் பாய்'. அதினால்தான் உன்னால் இப்படி கேட்க முடிந்தது. அதற்கெல்லாம் நாட்கள் நிறைய இருக்கு. நாளை நடப்பது இன்று எவர் அறிவார்? ஆனாலும்;
முதல் கேள்விக்கு என் பதில்; இதோ! வரும் நாட்களில் நீ எவராக வேண்டுமானாலும் ஆகலாம் ; நீ நல்லவனாக ஆக வேண்டும் என்பதே என் ஆசை; சரியா!
இப்போது இரண்டாம் வினாவுக்கு என் விடை; இதோ.நீ எதிலும் வல்லவன் ஆவாய்; என்றே நான் நினைக்கிறேன் ; என்றார் தாத்தா.
பேரன்' தாத்தா! நீங்க என்னை விட 'ஸ்மார்ட் க்ராண்ட் பா' . நீங்க ஸ்மார்ட் தாத்தாவாக இருக்கறதினால்தான் தான் நான் ஸ்மார்ட் க்ராண்ட் சன்' ஆக இருக்கிறேன். என்று சொல்லி கைகுலுக்கினான்; பேரன்.
சசிகலா விஸ்வநாதன்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?