ஹைக்கூ கவிதைகள்:
மகளின் பரதத்தில் அழகை
கண்ட - அவள் மறந்தது
தான் ஆடிய அபிநயங்களை!!!
💗டென்ஷனின் எதிர்ப்பதம் நான் தான்
எனக் கூறியவளின்-கைப்பிடித்து
என் டென்ஷனே- நீதான்
என்றான்!!!
💗 நேர்த்தியாக ஆடை அணிந்தாலே- நாட்டில்
பிரச்சனை வராது- எனக் கூறி
அரை ட்ராயருடன் வெளிப்பட்டான்!!!
💗கள்ளத்தனத்தை அழகாக - காட்டிக் கொடுத்தது
அவளின் பாத கொலுசு!!!
💗பல வகை இரைச்சலிலும்
வசதியாக தூங்க -பதறி
எழுந்தாள்- தன் குழந்தையின்
மெல்லிய சினுங்கலில்!!!
💗 மக்கள் அனைவரும் மிக
கவனமாக - மடியினில்
குழந்தையை போல்
மடிக்கணினி!!!
எதிலும் கிடைக்காத தெம்பு
தன் கைப்பையில் உள்ள
பணம் மூலமாக கிடைத்தது - அவளுக்கு!!!
💗 தங்கம் விலை ஏறுவது
போல் ஏறுகிறது - அவளின் ரத்த அழுத்தம்
அவனை கண்டவுடன்!!!
💗அழகாய் கத்தி அழைத்த - நடத்துனர்
மிக அமைதியாக கடக்கிறார் - மகளீர் கல்லூரியை கண்டவுடன்!!!

பானு ஶ்ரீ
பாண்டிச்சேரி
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?