குடியிருப்பு வளாகத்தில்
இரவெல்லாம் இருமிக் கொண்டிருந்தார்
காவலாளி...
நீர் வற்றி வரும்
குளத்தைச்சுற்றி
ஏக்கத்தோடு பார்த்தன
கொக்குகள்...
மரியாதையும் மதிப்பும்
தேடி வந்து மகிழவைத்தது
செல்வம்....
பண்பாட்டின் வளர்ச்சியை
மேம்படுத்தி காட்டுகிறது
மரங்கள்...
வாக்கின் மகிமையை
விலையாக்கியவர்கள் எல்லாம்
பச்சோந்திகள்...
மொழியின் உரிமை
உணர்வில் கலந்த
உயிர்...
நல.ஞானபண்டிதன்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%