🤷🏻♂️🤷🏻♂️
நாளை நன்மையாய்
புலருமென்றே;
நாள்தோறும் காத்திருக்கிறோம்!
நாம் மட்டுமா?
கருமேகம் கிழித்து
செஞ்சுடரோன் உதிக்குமெனெக்கென
பட்டத்தரசர் காத்திருக்கும் வேடிக்கை:
காலத்தில் பூக்காத மல்லி தனக்கில்லை
எனினும்
தனயனுக்காவது கிட்டாதா;
விடாயில் வேந்தன்:
நம்பிக்கையற்ற நம்பிக்கையில்
பம்மும் பழைய பங்காளி
இலையுதிர் காலம் முடிந்து
வசந்தம் வருகுது என
நாடற்ற ராசன்
நாட்டமுடன் பார்த்திருக்க:
சமாதியில் கையடித்து சபதம் செய்து கொற்றவை
சத்தமின்றி சமாதானக் கொடி ஏந்த:
தமிழ் பொய்கையில்
தாமரை மலருமென ஒற்றைக்காலில்
கண்மூடி
சரவணபொய்கையில் தவமிருக்கும் வெகுதூர பறவை:
பானை பழையது என்றாலும்
பால் பொங்கி வந்து
தனக்கொரு கவளத்தில்
மீசை நனையும் என்ற கனவில்
சிறுத்தை
மாம்பழம் ஒன்றுக்கு
தந்தையும் தனயனும் பங்காளியான விந்தை:
நடுத்தெருவில்
கை வீசி
புருவம் உயர்த்தி
நாடகம் நடத்தும் நடிகன்:
நாம் தமிழர் குரல் ஓங்கி ஒலித்து
தமிழர் செவியில் ஏறிடுமா?
போர் முரசு ஒலிக்கும்
நேரம் விரைவில்
வெற்றி முரசொலி
எட்டு திக்கும் கேட்கும்; நிச்சயம்
எவர் முரசு ஒலிக்கும்?
எக்காளம் எவர் கையில் உயரும்?
சசிகலா விஸ்வநாதன்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?