ஹவுரா ரயிலில் 2 நாட்களில் ரூ.3.40 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்

ஹவுரா ரயிலில் 2 நாட்களில் ரூ.3.40 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்

சென்னை:

ஹவு​ரா​வில் இருந்து சென்னை வந்த விரைவு ரயில்​களில் அடுத்​தடுத்து 2 நாட்​களில் மட்​டும் ரூ.3.40 லட்​சம் மதிப்​பிலான உலர்ந்த கஞ்சா பொட்​டலங்​கள் கைப்​பற்​றப்​பட்​டுள்​ளன. சென்னை எழும்​பூர் ரயில் நிலை​யத்​தில் ஆர்​பிஎஃப் ஆய்​வாளர் ஜெபாஸ்டியன் தலை​மை​யில் உதவி ஆய்​வாளர் அன்​புசெல்​வன், தலை​மைக் காவலர் கண்​ணன் மற்​றும் ஆர்​பிஎஃப் போலீ​ஸார் செவ்​வாய்க்​கிழமை இரவு கண்​காணிப்பு பணி​யில் ஈடு​பட்​டனர்.


அப்​போது, 7-வது நடைமேடைக்கு இரவு 8.20 மணி அளவில் மேற்​கு​வங்​க மாநிலம் ஹவு​ரா​வில் இருந்து சென்னை எழும்​பூர் வழி​யாக கன்​னி​யாகுமரிக்கு செல்​லும் வாராந்​திர விரைவு ரயில் வந்​தது.


அந்த ரயி​லில் எல்லா பெட்​டிகளி​லும் ஆர்​பிஎஃப் போலீ​ஸார் மற்​றும் ரயில்வே போலீ​ஸார் இணைந்து சோதித்​த​போது, பொது பெட்டியில் கேட்​பாரற்று ஒரு பை கிடந்​தது. அந்த பையை உரிமை கோரி யாரும் முன்​வர​வில்​லை. இதையடுத்​து, அந்​த பையை திறந்து பார்த்​த​போது, அதில் பச்சை நிற உலர்ந்த கஞ்சா பொட்​டலங்​கள் இருந்​தன. மொத்​தம் 4 கிலோ எடை கொண்ட இதன் மதிப்பு ரூ.2 லட்​சம்.


இந்த கஞ்சா பொட்​டலங்​களை எடுத்​து​ வந்த நபர் யார், எங்​கிருந்து கடத்தி வரப்​பட்​டது என்​பது குறித்து போலீ​ஸார் விசாரித்து வரு​கின்​றனர். ஏற்​கெனவே, கடந்த திங்​கள்​கிழமை இரவு ஹவு​ரா​வில் இருந்து எழும்​பூர் வந்த வாராந்​திர விரைவு ரயி​லில் ரூ.1.40 லட்​சம் மதிப்​பிலான சுமார் 3 கிலோ எடை கொண்ட கஞ்சா பொட்​டலங்​கள் கைப்​பற்​றப்​பட்​டன.


அடுத்​தடுத்​து, இரண்டு நாட்​களில், ஹவு​ராவில் இருந்து எழும்​பூருக்கு வந்த ரயில்​களில் 7 கிலோ கஞ்சா கடத்​தப்​பட்​ட​தால், போலீ​ஸார் அதிர்ச்சி அடைந்​துள்​ளனர். இதுகுறித்து, ஆர்​பிஎஃப் போலீ​ஸார் விசாரணையை தீவிரப்​படுத்தி உள்​ளனர்​.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%