நாய்க்கு இருப்பிடச் சான்றிதழ் கோரியவர் மீது வழக்குப்பதிவு

நாய்க்கு இருப்பிடச் சான்றிதழ் கோரியவர் மீது வழக்குப்பதிவு

பாட்னா: ​

பிஹார் மாநிலம் பாட்​னா​வில் நாய்க்கு இருப்​பிடச் சான்​றிதழ் வழங்​கப்​பட்டது சர்ச்​சையை எழுப்​பி​யுள்​ளது. பிஹாரில் வாக்​காளர் பட்​டியல் சிறப்​புத் திருத்​தப் பணி நடை​பெற்று வரும் நேரத்​தில் நடந்த இச்​சம்​பவம், அதி​காரப்​பூர்வ சரி​பார்ப்பு செயல்​முறை​கள் குறித்து கேள்வி​களை எழுப்​பி​யுள்​ளது.


நாய்க்கு வழங்​கப்​பட்ட இருப்​பிடச் சான்​றிதழ் விவர​மும் வெளி​யாகி​யுள்​ளது. அந்​தச் சான்​றிதழ் எண் பிஆர்​சிசிஓ/2025/15933581, வார்டு எண் 15, மசாவர்ஹி நகராட்சி கவுன்​சில் என்​றும் இந்த பகு​தி​யில் பாபு (நாய்) வசித்து வரு​கிறார் என்​றும் அந்த சான்​றிதழில் குறிப்பிடப்​பட்​டுள்​ளது.


நாய்க்கு இருப்​பிடச் சான்​றிதழ் வழங்​கப்​பட்ட விவ​காரம் சமூக வலை​தளங்​களில் வைரலான நிலை​யில் இந்த இருப்​பிட சான்​றிதழ் நேற்று முன்​தினம் ரத்து செய்​யப்​பட்​டது.


இந்த விவ​காரத்​தில், சான்​றிதழ் பெற விண்​ணப்​பித்த கணினி ஊழியர் மற்​றும் அவருக்கு சான்​றிதழ் அளித்த அதி​காரி ஆகியோருக்கு எதி​ராக முதல் தகவல் அறிக்​கை​யை(எப்​ஐஆர்) போலீ​ஸார் பதிவு செய்​துள்​ளனர் என பாட்னா மாவட்ட நிர்​வாகம் தெரி​வித்​துள்​ளது. மேலும் சான்​றிதழ் வழங்​கிய அதி​காரி மீது நடவடிக்​கை எடுக்​க​வும்​ பரிந்​துரை செய்​யப்​பட்​டு உள்​ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%