ஸ்ரீ புத்திர காமேஷ்டீஸ்வர 25 ஆம் ஆண்டு சிறப்பு மஹா யாகம்........
Jul 11 2025
84

திருவண்ணாமலை மாவட்டம்,ஆரணி நகரம், புதுக்காமூர் பகுதியில் புனித நதியான கமண்டல நாகநதிக்கு தென்கரையில் தசரத மகாராஜா காலம் முதல் பல யுகங்களாக இன்றும் தொடர்ந்து குழந்தை வரம் வேண்டுபவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். அருள்மிகு ஸ்ரீ பெரிய நாயகி சமேத புத்திர காமேஷ்டீஸ்வரர் ஆலயத்தில் ஆனி மாதம் 26 ஆம் நாள் 10.07.2025 பௌர்ணமி திதி பூராடம் நட்சத்திரத்தில் காலை 9 மணிக்கு மேல் ஸ்ரீ கணபதி, ஸ்ரீ லக்ஷ்மி,ஸ்ரீ நவகிரக ஹோமம் மற்றும் பிற்பகல் 1 மணிக்கு புத்திர காமேஷ்டி யாகம் செய்து அனைவரும் வேண்டி அருள் பெற்றனர். ஸ்ரீ பிரஹன்னாயகி சமேத புத்திர காமேஸ்வரர் சுவாமி பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தி ஸ்ரீ ராமர் மற்றும் குமாரர்கள் பிறந்ததாகும் வரலாறு கொண்ட புண்ணிய ஷேத்திரம் அங்கு பிரதி வருடம் ஆனி மாதம் பௌர்ணமி நாளில் குழந்தை பாக்கியம் வேண்டி இந்த சுப நிகழ்ச்சி கலந்து கொண்டு சங்கல்பம் செய்து கொண்டு பலனடைகின்றார்கள். இந்த ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சி இந்த ஆலயத்தில் எதிரே ஸ்ரீ தசரதர் சன்னதி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. நாக தோஷம் நீங்க பரிகாரம் செய்ய நாகப்பிரதோஷம் செய்யும் பரிகாரத்தலம் . சோம வார அமாவாசை அன்று பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து வழிபாடு நடத்தி வேண்டிக் கொள்வர்கள். பிரதி வருடம் காணும் பொங்கல் அன்று ஆற்றுத்திருவிழா எனும் நிகழ்வு வெகு சிறப்பாக ஏற்பாடுகள் செய்து திருவிழா நடத்துகிறார்கள். இந்தக் கோவில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அர்ச்சகர்களால் இரண்டு கால பூஜைகள் தினமும் நடைபெறும் திருக்கோயில். மாத பிரதோஷம் சிவராத்திரி சோமவார வழிபாடுகள் நவராத்திரி போன்ற அனைத்து நிகழும் சிறப்பாக நடத்துகிறார்கள். ஏராளமான பக்தர்கள் மஹா யாகத்தில் கலந்துகொண்டு வேண்டிய அருள் பெற்றனர். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?