
தேரோடும் வீதியிலேத் தெருவெலாம் கொண்டாட்டம்
போராடி உழைப்பவர்க்குப் பொன்னான மனவோட்டம்!!
ஊரிலுறைத் தெய்வத்தின் ஊர்வலத் தேரோட்டம்
பாரினிலேப் பக்தர்கள் மனமகிழும் கொண்டாட்டம் !!
இளைஞர்கள் உற்சாகமாய் இழுத்திடும் தேரோட்டம்
களையான காளையர்கள் ஆடிமகிழும் கொண்டாட்டம்!!
குழந்தைகளும் கூட்டத்தில் குச்சிமிட்டாய் போராட்டம்
கிழவர்கள் தேர்காண இடத்திற்கும் திண்டாட்டம் !!
பொம்மைபலூன் பீப்பிஊதல் கொட்டிடவே தேரோட்டம்
அம்மையப்பன் உயரேயிருந்து தந்திடும் அருளோட்டம்!!
தேர்திரும்ப முரசுகொட்டித் தெம்மாங்காய் இசையோட்டம்
ஊர்கூடி வடம்பிடிக்க உற்சாக ஓசையோட்டம் !!
மிட்டாய்தின் பண்டவிற்பனை மேலான நடமாட்டம்
இட்டமுள்ள மக்களெல்லாம் அன்னதானக் கொண்டாட்டம்
அக்கம்பக் கப்பெண்கள் குதிபோடும் மகிழாட்டம்
ஒக்கலிலேக் குழந்தைகள்தொத்தியேச் சிரிப்பாட்டம்!
தடிபோடப் போடத்தேரில் நெல்லையப்பர் குதியாட்டம்
மிடிதனையே அகற்றிடவே காந்திமதியின் அருளாட்டம்!!
சண்முக சுப்பிரமணியன்
திருநெல்வேலி
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?