முகத்தில் சோகம் அப்பிட வீட்டுக்குள் நுழைந்த வெங்கி என்கிற வெங்க
டேசனைக் கண்டதும் நெற்றி சுருக் கினார் சங்கி என்கிற சங்கரன். வெங்
கியை விட மூத்தவர் சங்கி. அதனால்
அவர் வெங்கியிடம் ஒருமையில்
பேசுவார். வெங்கியும் இதை பெரி
சாக எடுத்துக் கொள்ள மாட்டார்.
" டேய் ! என்னடா என்னவோப்போல இருக்குற ! உன்னோட பங்காளி யாராவது புட்டுக்கிட்டாங்களா ?" என்றார் சங்கி. அவர் பேச்சில் நய்யா ண்டித்தனம் வழக்கம் போல் இருந்
த்து !
" இல்லண்ணே ! நம்ம தோஸ்த் ஒருத்தர்நாட்டுக்காக தன் உயிரையே தியாகம் பண்ணிட்டாரு !"
" அப்படியா ! யார்ரா அது ?"
" நம்ம சுப்பு அண்ணே !"
" எப்போப் பார்த்தாலும் தண்ணி அடிச்
சிட்டு விழுந்து கிடப்பானே ! அவனா?"
" அண்ணே ! அவர்தான்...அவர் எப்படி
உயிரை விட்டார்னு தெரிஞ்சா நீங்கக்
கூட வருத்தப்படுவீங்க !"
" அப்படியா..சொல்லு ராஜா !"
" அண்ணே ! கொஞ்ச நாள் முன்னாடி
பாகிஸ்தான் தீவிரவாதீங்க நம்ம நாட்டு ராணுவ வீரர்கள் 40 பேரை படுகொ லை பண்ணாங்க இல் லையா ?"
" ஆமாம் !"
" அந்த நியூஸ கேட்ட நம்ம சுப்பு அதிர்ச்சியில அப்படியே நெஞ்சைப் பிடிச்சுக்கிட்டு சாய்ஞ்சவர்தான். அதுக்கப்புறம் எழுந்திருக்கவே இல்ல."
" அதுக்கு !"
" அது தியாகமில்லையா ?"
" படவா..ராஸ்கல் ! வயிரு முட்ட குடிச்சு
ஹார்ட் வெடிச்சு செத்தான். அவனப்
போய் தியாகிங்குறயே ! ...அது சரி. எப்படிடா இந்த மாதிரியெல்லாம் ஐடியா தோணுது ?"
" அண்ணே ! அதுக்கு நடு மூளை வேணும்!"
" என்னது நடுமூளையா ?"
" ஆமா..பெருமூளைக்கும்சிறுமூளைக்
கும் நடுவுல இருக்குற மூளை. உலக த்திலேயே என்கிட்ட மட்டும்தான் இருக்கு !"
" நைனா ! இப்படியே வெளியில போய்
சொல்லிடாதே. அப்புறம் நடு முதுகில
நாலு சாத்து சாத்துவாங்க !"
" அதை விடுங்கண்ணே ! ஒரு விஷயம உங்கக் கிட்ட கன்ஃபர்ம் பண்ணலாம்னு வந்தேன்."
" சரிதான் ஏதோ விவகாரமாதான் வந்திருக்கேன்னு தெரியுது ! கேளு ராஜா !"
" அண்ணே ! அபிமன்யு பத்தி ஏதாவது
விஷயம் தெரிஞ்சுதா?"
" யார்ரா அது ?"
" அதாண்ணே ! ரிங் மாஸ்டர் !"
" என்னது..ரிங் மாஸ்டரா ?"
" ஆமாண்ணே ! பாகிஸ்தான் ராணுவத்திடம் மாட்டிக்கிட்டாரே..."
" அடப்பாவி ! ரிங்மாஸ்டரா டேய்..அவர் விங் கமாண்டர்டா. அவர் பேர் அபின ந்தன். இப்படி எக்குத் தப்பா பேசுறே !"
" அண்ணே ! என் வாயில வரமாதி ரிதான் என்னால பேச முடியும் ! "
" டேய் ! முதல்ல உன் வாயை நல்லா டெட்டால் போட்டு கழுவு . அப்பதான் உருப்படுவே !"
" அத விடுங்கண்ணே ! அவர் எப்படி பாகிஸ்தான்ல போய் மாட்டினாரு ?"
" அதுவா...வந்து...பாகிஸ்தான் எல்லைக்குள்ளாற பறந்துபோய் அவங்க விமானத்த தாக்கியிருக்காரு. பதிலுக்குஅவங்கஅபிமன்யு...சாரி..அபினந்தன் பிளேனசுட்டுட்டாங்க. உடனே தப்பிக்க கீழே குதிச்சிரு க்காரு. பாகிஸ்தான் ராணுவம் கிட்ட மாட்டிக்கிட்டாரு..."
" அடடா ! குதிச்சதுதான் குதிச்சாரே ! நம்ம இந்திய எல்லைக்குள்ளாற குதிச்சிருக்கக் கூடாது !"
" இவ்வளவு வக்கரணையா பேசறயே !
நீ போய் பாரு தெரியும் !"
" அண்ணே ! மட்டமா பேசாதீங்க ! எங்க தாத்தா பிரிகேடியர். சைனா வார்ல பிரமாதமா பங்கெடுத்துக்கிட் டிரு க்காரு.."
" என்ன உங்கத் தாத்தா கேடியா ?" வார்ல கொக்கு சுட்டாரா ?"
" எங்கப்பா கேப்டன் பல்ராம் !"
" உங்கப்பா என்ன , சப்பாத்தி சுட்டாரா?"
" அவங்களோட வாரிசு நான் ! நான் மட்டும் பங்கெடுத்துக்கிட்டா பாகிஸ் தான் தீவிரவாதிங்க அத்தனை பேரை யும் பாம் போட்டு அழிச்சிடுவேன்...."
" எது..ஜன்டோ பாமா ?"
" இல்லேன்னா ஜே.கே 47 மெஷின் கன்னால அத்தனைபேரையும் பட் பட்டுன்னு ஷூட் பண்ணிடுவேன் !"
" என்னது ஜே.கே 47 கன்னா...படுவா
உன்ன என்ன செய்யறேன் பாரு !" சங்கிதடியை எடுப்பதற்குள் மாயமாய் மறைந்து விடுகிறார் வெங்கி.
.......................................

-வி.கே.லக்ஷ்மிநாராயணன்
..