
சென்னை:
சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் ஏ.மோகன்தாஸ் (54). இவர் வசித்து வந்த வாடகை வீட்டை காலி செய்ய மறுத்ததாக வீட்டு உரிமையாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சென்னை உயர்நீதிமன்றம் மே 31, 2025-க்குள் வீட்டை காலி செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. நீதி மன்றம் கொடுத்த காலக்கெடுவைக் கடந்தும் வீட்டை காலி செய்ய மறுத்ததால், வீட்டு உரிமையாளர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு நீதிபதி என். சதீஷ்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து, நீதிபதி கடுமை யான கோபத்துடன் 4 மாத சிறை தண்டனை விதித்தார். “மேல் முறையீடு செய்வதற்கு கால அவகாசம் கொடுக்கப்படாது. சிறை யில் இருந்து மேல்முறையீடு செய்து கொள்ளலாம்” என்றும் உத்தரவிட்டார். இத்தகைய நேர்மையற்ற நடத்தையை நீதிமன்றம் உறுதியாக எதிர்க்கவில்லை என்றால், அது அத்தகைய வழக்கறி ஞர்களுக்கு சாதகமானதாக இருக்கும் என்றும் கூறினார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், உயர் நீதிமன்றத்தின் உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?