1. *முதல் கட்டம்: வயது 58 முதல் 65 வரை* இந்நேரத்தில் உங்கள் வேலைத்தளம் உங்களை விட்டு விலகத் தொடங்கும். உங்கள் பணிக்காலத்தில் நீங்கள் எவ்வளவு வெற்றி பெற்றவராக இருந்தாலும், அதிகாரம் கொண்டவராக இருந்தாலும், இனி நீங்கள் ஒரு சாதாரண மனிதராகவே பார்க்கப்படுவீர்கள்.அதனால், பழைய பதவியின் பெருமையையும், அந்த மனப்பான்மையையும் பற்றிக் கொள்ளாதீர்கள்.
2. *இரண்டாம் கட்டம்*: *வயது 65 முதல் 72 வரை*:. இந்த வயதில், சமூகம் மெதுவாக உங்களை விட்டு விலகத் தொடங்கும். பழைய தோழர்கள், வேலை நண்பர்கள் ஆகியோருடன் சந்திப்புகள் குறையும். உங்கள் பழைய பணியிடத்தில் இருந்தவர்கள் கூட உங்களை அடையாளம் காணமாட்டார்கள்.*நான் இருந்தேன்*, *நான் செய்தேன்* என்று கூறாதீர்கள், ஏனெனில் இளம் தலைமுறை உங்களை அறியாது; அதைக் குறித்து மனம் புண்படாதீர்கள்.
3. *மூன்றாம் கட்டம்: வயது 72 முதல் 77 வரை*. இந்த கட்டத்தில், குடும்பமே மெதுவாக உங்களை விட்டு விலகத் தொடங்கும். குழந்தைகள், பேரன் பேத்திகள் இருந்தாலும், பெரும்பாலான நேரங்களில் நீங்கள் உங்கள் துணையுடன் அல்லது தனியாக இருப்பீர்கள். குழந்தைகள் சில சமயம் வருவார்கள் என்றால், அது அவர்களின் அன்பின் வெளிப்பாடு. அவர்கள் குறைவாக வருவதை குற்றம் சொல்லாதீர்கள்; அவர்கள் தங்கள் வாழ்க்கையில் பிஸியாக உள்ளனர்.
*77 வயதிற்குப் பின்*, இந்த பூமி கூட உங்களை விட்டு விட விரும்பும். அந்த நேரத்தில் சோகப்படாதீர்கள், வருந்தாதீர்கள் — இது வாழ்க்கையின் இறுதி கட்டம், எல்லோரும் இதே பாதையைத் தான் கடந்து செல்வார்கள்.
அதனால், உடல் இயல்பாக இருக்கும் வரை முழுமையாக வாழ்க்கையை அனுபவியுங்கள்!
உங்களுக்கு பிடித்ததை உணவாகச் சாப்பிடுங்கள்,
உங்களுக்கு பிடித்ததைச் செய்யுங்கள்,
விளையாடுங்கள், மகிழுங்கள், சந்தோஷமாக இருங்கள்.
*அன்பான மூத்த குடிமக்கள் சகோதரர்கள், சகோதரிகளே*,
மேலே உள்ள கட்டுரை மிகவும் அருமையாக எழுதப்பட்டுள்ளது.
எழுதியவருக்கு நன்றியும் பாராட்டுகளும்.
*58 வயதிற்குப் பிறகு, நண்பர்களுடன்* ஒரு குழுவை அமைத்து, ஒரு நிரந்தர இடத்திலும் நேரத்திலும் அடிக்கடி சந்தியுங்கள்.
தொலைபேசி மூலம் தொடர்பில் இருங்கள்.
பழைய நினைவுகளை நினைத்து மகிழுங்கள், ஒருவருடன் ஒருவர் பகிர்ந்துகொள்ளுங்கள்.
*எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள்*.
*வாழ்க தமிழ்!!!*
*வளர்க தமிழகம்!!!*
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?