
அலைவரிசையில்
ஆகாயம் தொட்டு
கலைநயத்தோடு
காதுகளில் தவழும்
அதிகாலை
அழைப்பு மணியாக
ஆன்மீகம்
நம்மை எழுப்ப
அடுக்களை வேலையின் சலிப்பை
அடுத்தடுத்த பாடல்கள்
போக்கும்
சிற்றூர்களின்
சிறு கடையை
உலக அரசியல்
பேசும் அரங்கமாக்கும்
காதை அழுத்திச்
சில நேரம்
மூக்கைத் திருகி
சில நேரம்
தலையில் தட்டி
சில நேரம்
தப்பாது பேசி
தளர்வைப் போக்கும்
எங்கோ இருந்த குரலெல்லாம் எதிரொலியாக
எந்நாளும்
உலா வரும்
மொட்டை மாடி நிலவொளியில்
தலையணையின்
அரவணைப்பில்
தாலாட்டும் பாடல்
தாயை நாளும்
நினைவூட்டும்
கண்ணின் பார்வை குறையவில்லை
கடிகாரத்தின் நேரம் முழுங்கவில்லை
ஊர் வம்பு என்றும் இருந்ததில்லை
உண்மை மட்டும்தானே
நீ உரைத்தாய்
கவலைகளை மறக்கச் செய்து களைப்பைப் போக்கச் செய்து
களிப்பு தரும்
வானொலியே
விஞ்ஞானத்தின் வளர்ச்சியில்
உருவ மாற்றங்கள் வந்தாலும்
கருவாக இருப்பதென்னவோ
நீதான்!
***************************
தமிழ்நிலா
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?