
வணக்கம் சோழ மண்டலம்
பாரதப் பிரதமர் மோடி ராஜேந்திர சோழன் பிறந்த நாள் விழா பிரகதீஸ்வரர் கோயில் ஆயிரம் ஆவது ஆண்டு விழா என முப்பெரும் விழாவிற்கு வருகை தந்து ஒட்டுமொத்த தமிழகத்திற்கு பெருமை சேர்த்தது பாராட்டக்கூடியது அவர் இறை வழிபாடு செய்து கங்கை இருந்து கொண்டுவரப்பட்ட நீரால் கங்கைகொண்ட சோழபுர இறைவனை வழிபட்டது பெருமைக்குரியது ஓதுவார்கள் பாடல்கள் பாட இசைஞானி இளையராஜா நான் கடவுள் படத்தில் வரும் ஓம் சிவ ஓம்... என்ற பாடலை கேட்டு பிரதமர் பக்தி பரவசமடைந்து எழுந்து நின்று கைதட்டி ரசித்தது அவரது இசைக்கு கிடைத்த பெருமை திருவாசகத்தின் சிம்பொனியின் இசைத்து ஒட்டுமொத்த பக்தர்களையும் இறை இசை இசையில் மயக்கி விட்டார் இளையராஜா பிரதமர் மோடி வணக்கம் சோழமண்டலம் இன்று உரையை துவங்கி சோழர்களின் பெருமையை தமிழகத்தின் பெருமையை அழகாக எடுத்துரைத்தார் ராஜராஜ சோழன் ராஜேந்திர சோழன் இரு மாமன்னர்களுக்கும் பெருமை சேர்த்து அவர்களின் ஆட்சி முறை வீரம் என உரை வீச்சு ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் போய் சேர்ந்திருக்கும் இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் இரு மாமன்னர்களுக்கும் மாபெரும் சிலை நிறுவ பிரதமர் கூறியது உலக தமிழக மக்களுக்கும் பெருமையாக தான் இருக்கிறது அரசியலுக்கு அப்பாற்பட்டு பிரதமர் மோடி தமிழ் பாரம்பரிய உடையில் பூரண கும்பத்துடன் கோயிலை வலம் வந்தது இசையை ரசித்தது என ஒரு சாமானிய மக்களின் பிரதிநிதியாகவே வந்து சென்றார் சிலை நிறுவ அறிவித்த பிரதமர் மோடி அவர்களுக்கு ஒட்டுமொத்த தமிழர்கள் சார்பாக நன்றியை கூறிக் கொள்கிறேன்.
போயஸ் கார்டன்
பொன்விழி அன்னூர்
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?