28.07.2025
வான் குருவியின் கூடு
வல்லரக்கு தொல் கரையான்
தேன் சிலம்பி யாவர்க்கும்
செய்தறியால்
யாம் பெரிதெனும் வல்லானே என்று
வலிமை சொல்ல வேண்டாம் காண்
எல்லோர்க்கும் ஒவ்வொன்று எளிது
தமிழ்ப் பெரும் மூதாட்டி
ஒளவையார் பாடல் இது.
மன்னர் அவையில் புலவர்கள் எல்லாம்
அமர்ந்துள்ளனர்.
ஒவ்வொருவரும் எழுந்து அரசர் முன் தத்தமது புகழை தாங்களே பெருமை அடித்துப் பேசுகின்றனர்.
இப்போது ஒளவையார் முறை வருகிறது.
தற்பெருமை பேசும் புலவர்களுக்கு பாடம் புகட்ட விரும்புகிறார்.
" புலவர் பெருமக்களே!
நான் உங்களைக் கேட்கிறேன்...
தூக்கணாங் குருவி போல் உங்களில் யாருக்காவது கூடு கட்டத் தெரியுமா?
தெரிந்தவர் யார் இருந்தாலும் எழுந்திருக்கலாம்."
என்று சொல்லவும்
சபையில் கனத்த அமைதி. யாரும் எழ வில்லை.
ஒளவையார் மீண்டும் தொடர்ந்தார்.
" தேனீ மாதிரியாவது
உங்களால் முடியுமா?"
இதற்கும் யாரும் முன்வரவில்லை.
அடுத்து கரையான் புற்றைச் சொன்னார்.
ஒருவரும் பதில் கூற முன் வரவில்லை.
சாதாரண உயிரினம் பண்ணும் காரியத்தை நம்மில் யாருக்குமே செய்யத் தெரிய வில்லை... அப்படி இருக்கும் போது
பெருமை அடித்துக் கொள்ள இங்கே யாருக்குமே தகுதி கிடையாது. கடவுள் படைப்பின் மகத்துவம் என்ன தெரியுமா?
எல்லார்க்கும் ஒவ்வொன்று எளிது..."
இந்தப் பாடலின் அற்புதமான கருத்தை
ஆழ்ந்த பார்வையில்
புரிந்து உள் வாங்கினால், தலைக்கனமோ, அகங்காரமோ இருந்த இடம் தெரியாமல் பறந்தோடி விடும்.
ஆகவே எல்லோரும் எல்லாரிடமும் இயல்பாய் நடந்து
இன்பமாய் இருப்போம்.
சிவ முத்து லட்சுமணன்
ஒரு தந்தை தன் மகனுக்கு எழுதிய அழகிய அருமையான கடிதத்தைப் படித்த போது ஆபிரகாம் லிங்கன் தன் மகனுக்கு எழுதிய அந்தப் புகழ் பெற்ற கடிதம் நினைவுக்கு வந்தது.
ஜவஹர்லால் நேரு தன் பிரிய மகள் இந்திராவுக்கு எழுதிய கடிதங்களும் காவிய அந்தஸ்து பெற்றதும்
இங்கே கவனிக்கத் தக்கது.
இந்த தருணத்தில் இன்னொரு விஷயமும் தொடர்ந்து வருகிறது.
மறைந்த எழுத்தாளர்
பாலகுமாரன் சொல்லுவார்...
என் செல்ல மகளுக்கு
என்னால் உபதேசம் எதுவும் சொல்லத் தோன்றுவது இல்லை.
இந்த உலகமே போர்க் களந்தான்...போ...போ
என்று பிடித்துத் தள்ளத் தான் மனம் வருகிறதே தவிர
உபதேசிக்க தோன்ற வில்லை...'
கடிதப் பேச்சு எப்படியோ நீண்டு விட்டது. அது போகட்டும்..இன்று கடிதம் எழுதும் பழக்கமே இன்றைய இளைய தலைமுறையிடம் காணாமல் போய் விட்டதே...
நலம் தரும் மருத்துவம் பகுதியில் பயனுள்ள தகவல்கள்...
தினம் ஒரு தலைவர்கள் பகுதியில் அஸ்ஸாமை சேர்ந்த கோபிநாத் பர்தலை வரலாறு படித்தேன். இனம் தெரியாத உற்சாகம்
உள்ளத்தில் பொங்கியது.
இந்தப் பகுதி தமிழ் நாடு இபேப்பரின் முக்கிய அணிகலனாக திகழ்கிறது.
நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!
வழக்கம் போல் கவிதைகள் அனைத்தையும் ஒரே மூச்சில் படித்து முடித்து விட்டு நிம்மதி பரவசம் அடைந்தேன்.
தமிழ் நாடு இ பேப்பரின் ஆசிரியர் குழுமத்தின் திறமை மிக்க செய்தி தொகுப்பு அசத்தல்.
யாரையும் முகம் சுளிக்க வைக்காமல்
அர்த்த அடர்த்தியில் அட்டகாசமாக வெளி வருவதற்கு ஸ்பெஷல் வாழ்த்துகள்!
பி.சிவசங்கர்
கோவை