வாசகர் கடிதம் (P. கணபதி) 25.07.25

வாசகர் கடிதம் (P. கணபதி) 25.07.25


முதலில் குறிப்பிட வேண்டியது ஜோக்ஸ். ஆஹா, வெளியாகியுள்ள ஜோக்குகள் 19ம் பைவ் ஸ்டார் ரகம். சூப்பர். 


இந்தியா - இங்கிலாந்து புதிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மகிழ்ச்சியான தலைப்பு செய்தி. இரு நாடுகளின் பொருளாதாரத்தில் ஒரு புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது. 


நலம் தரும் மருத்துவம் பகுதியில் சமையலறையில் எழும் புகைகளினால் விழையும் ஆபத்துக்கள் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. சமைக்கும் நபர்களுக்கான அறிவுரைகள் அவசியம் பின்பற்றத் தக்கன.


சோழகங்கம் ஏரிப்பகுதியை சுற்றுலா தலைமாக்கும் முதல்வரின் அறிவிப்பு வரவேற்புக்கு உரியது. 


ஆத்தூர் தொகுதி மாணவர்களுக்கு தான் சொந்த செலவில் கல்விக் கட்டணம் செலுத்திய அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் நிச்சயம் பாராட்டப்படவேண்டியவர் என்பதில் ஐயமில்லை. அரசியல்வாதிகளுள் அரிய வகையினரும் உள்ளனர். 


குலச்சிறையார் நாயனார் வரலாறு அழகான, பிழையற்ற, ஆற்றொழுக்கான, அற்புதத் தமிழில் அமைக்கப்

பட்டுள்ளமை மனதுக்கு ரம்மியமாக இருந்தது. திரு.சிவா. முத்துலட்சுமணன் அவர்களின் தமிழ் நடையை அவரது தொடரும் கட்டுரைகளில் எதிர்பார்க்கிறேன். பாராட்டுக்கள் சார். (அமணர் 8000 பேர் கழுவில் ஏற்றப்பட்டனர் எனும் செய்தி முடிந்த முடிவல்ல. இன்றும் அதன் உண்மைத் தன்மை சர்ச்சைக்குரியதாகவே உள்ளது).


தொடர்ச்சியாக 60 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய என். ஜி. ரங்கா அவர்களின் கின்னஸ் சாதனை வியக்க வைக்கிறது. அற்புதமான பகுதி தினம் ஒரு தலைவர். 


ஜோதிட சாஸ்திரத்தில் வன்னி மரம் அவிட்டம் நட்சத்திற்கு உரியதாகவும், பால் மரமாகவும், மங்கலங்கள் வழங்கும் மரமாகவும் வகைப்படுத்தப் பட்டுள்ளது. (இதன் அறிவியல் பெயர் prosopis eneric என்பதாகும்). காளதீஸ்வரர் ஆலயத்திலுள்ள இம்மரம் 350 ஆண்டு பழமையானது என்னும் செய்தி வியக்க வைக்கிறது.



P. கணபதி

பாளையங்கோட்டை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%