நடுவானில் மாயமான ரஷ்ய விமானம்: 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலியா?
Jul 25 2025
16

மாஸ்கோ, ஜூலை 24–
ரஷ்யாவில் 49 பேருடன் சென்ற ஏ.என்.24 ரக பயணிகள் விமானம் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பை இழந்து மாயமாகி உள்ளது. இந்த விமான விபத்தில் பயணம் செய்த 49 பேரும் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள அமுர் மாகாணத்தில், அங்காரா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஏ.என்.24 ரக விமானம் சென்று கொண்டு இருந்தது. இந்த விமானத்தில்5 குழந்தைகள் உட்பட 43 பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள் என மொத்தம் 49 பேர் பயணித்துள்ளனர்.
விமானம் – சீனாவின் எல்லையையொட்டிய ரஷியாவின் அமுர் பிராந்தியத்தில் உள்ள டின்டா என்ற பகுதிக்கு மேலே பறந்தபோது விமானம் ரேடார் தொடர்பை இழந்து மாயமானது. டிண்டா விமான நிலையம் அருகே சென்ற போது, கட்டுப்பாட்டு அறையில் இருந்து விமானத்தின்தொடர்பு துண்டிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், மாயமான விமானம் விபத்தில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் உள்ள அமுர் என்ற இடத்தில் விமானத்தின் பாகங்கள் கண்டறியப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் விமானத்தில் பயணம் செய்த 49 பேர் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என உள்ளூர் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
விமானம் விபத்துக்குள்ளான இடத்திற்கு மீட்புப் படையினர் விரைந்துள்ளனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?